அனைத்தும் நாடகம்!
மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர், காரப்பொரி வாங்கி சாப்பிட்டது திட்டமிடாத நிகழ்வு என்றால், அவர் செல்லும் முன் அந்த இடத்திற்கு கேமராக்கள் எப்படி வந்தன? இது திட்டமிடப்பட்ட நிகழ்வு; அவரது பாக்கெட்டில் 10 ரூபாய் நோட்டுகள் இருந்தன; இவற்றை நம்ப முடிகிறதா ? இவை அனைத்தும் நாடகம் .
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
மாபெரும் பின்னடைவு!
அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சில் பாகிஸ்தான் பங்கு பெற்றிருப்பது, நம் நாட்டிற்கு மாபெரும் பின்னடைவு. பிரதமர் மோடியின் பிராந்திய மற்றும் உலகளாவிய செயல்பாடுகள், பாகிஸ்தானை தனிமைப்படுத்த தவறிவிட்டன. நம் நாட்டை விட, அமெரிக்காவை கையாள்வதில் அந்நாடு வெற்றி பெற்றிருப்பது கண்கூடாக தெரிகிறது.
ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்
முரண்பாட்டின் உச்சம்!
பாக்., நண்பராக திகழும் காங்., அந்நாட்டை கையாள்வது குறித்து அறிவுறுத்துவது முரண்பாட்டின் உச்சம். 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தராமல் தவறியதையும், நம் நாட்டின் இறையாண்மையில் சமரசம் செய்ததையும் தேசம் மறக்கவில்லை. முதலில், பாக்.,கை புகழ்வதை அக்கட்சி நிறுத்த வேண்டும்.
பிரதீப் பண்டாரி செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
பாவம் மம்தா பானர்ஜி. பேசுவதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை போல.
மமதாவின் நாடகம் உலக பிரசித்தி. கையில் காலில் கட்டு, வீல் சேரில் வலம், நெற்றியில் கட்டு, ஆன்னா ஊன்னா நான் உயிருடன் இருக்கும் வரை என்னை மீறி எதுவும் நடக்காது அப்டின்னு உதார். இதெல்லாம் பிறந்த குழந்தைகளுக்கும் தெரியும். கையூட்டு வாங்கிகிட்டு டாடா மோட்டார் nano தொழில் சாலையை துரத்தி அடிச்சது, கேவல அரசியல். மமதை யின் கொட்டம் தேர்தலின் படு தோல்வியை பரிசாக வழங்கப்படும்மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை