'கோ கேஸ்' டீலர் ஆகலாம் தொழில்முனைவோருக்கு அழைப்பு

சென்னை: தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 'கோ கேஸ்' நிறுவனம், புதிய டீலர்களுக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

கோ கேஸ் மையங்களை நடத்தி வரும் 'கான்பிடன்ஸ் பெட்ரோலியம்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் நிதின் கரா கூறியதாவது:

நாடு முழுதும் 68 எரிவாயு நிரப்பும் நவீன ஆலைகளை நடத்தி வருகிறோம். இதன் வாயிலாக, எளிமையான, விரைவான வினியோகம் சாத்தியமாகிறது. எங்களது எல்.பி.ஜி., நிலையங்கள் நகர்ப்புறங்கள், சிறு நகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் இயங்கி வருகின்றன.

நாடெங்கும் வீடுகள், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி.,யை வினியோகம் செய்து வருகிறோம்.

விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய தொழில் முனைவோருக்கு தொழில் வாய்ப்பை வழங்க இருக்கிறோம். அதன்படி, நாடு முழுதிலும் எப்பகுதியில் உள்ளவர்களும் விண்ணப்பித்து 'கோ கேஸ்' டீலராக ஆகும் வாய்ப்பு வழங்கப்படும். இதன் வாயிலாக உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement