எட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி மார்ச் மாதத்தில் 0.40% சரிவு
புதுடில்லி: நாட்டின் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி, கடந்த மார்ச் மாதத்தில் 0.40 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிக குறைந்த அளவாகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்துறைகளின் வளர்ச்சி 2.80 சதவீதமாக இருந்த நிலையில், மேற்காசிய போர் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, இந்த திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்ச கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின், முக்கிய துறைகள் சந்தித்த முதல் சரிவு இதுவாகும். வளைகுடா நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், உர உற்பத்தி வரலாறு காணாத வகையில், 24.60 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவே மொத்த உற்பத்தி குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இது தவிர, கச்சா எண்ணெய், நிலக்கரி, மின்சார உற்பத்தியும் சரிந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 6.40 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. சிமென்ட், ஸ்டீல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியும் சற்றே அதிகரித்துள்ளது.
மேலும்
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
-
திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது
-
ஓட்டுச்சாவடிகளில் பல வண்ணங்களில் குறியீடு; வாக்காளர்களின் சிரமத்தை தவிர்க்க ஏற்பாடு
-
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் தான்; துல்லிய கருத்துகணிப்புகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
உங்கள் ஓட்டுச்சாவடி, பாகம் எண் வரிசை எண்ணை அறிவது எப்படி?