மக்களுக்கு முழுமையாக பாடுபடுவேன்  வி.சி.க., வேட்பாளர் அப்துல்ரஹ்மான் உறுதி

பண்ருட்டி: பண்ருட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு , மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தொகுதி வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் ஓட்டு சேகரித்தனர்.

பண்ருட்டி வி.சி., கட்சி வேட்பாளர் அப்துல் ரஹ்மான் வணிகர்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர், வியாபார சங்க பிரமுகர்களிடம் பேசியதாவது:

பண்ருட்டி மக்களின் அனைத்து விதமான கோரிக்கைளையும் முன்னெடுத்து, சட்டசபையில், குரல் கொடுப்பேன்.

முந்திரி உள்ளிட்ட ஏற்றுமதியாகக்கூடிய பொருட்களுக்கு, விவசாயிகளுக்கான நேரடி வர்த்தகத்தை ஏற்படுத்தவும், விவசாயிகளின் நலன் காணவும், முழு நேரமும் மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய முமுமையாக பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம்,ஆனந்தி சரவணன், வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் அருள்செல்வம், தொழில் வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன், கவுன்சிலர் கதிர்காமன், அவை தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் குணசேகரன், கவுன்சிலர் கவுரிஅன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement