அறிவியல் ஆயிரம்

ஆழமான பள்ளத்தாக்கின் வயது






அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அமைந்துள்ள 'கிராண்ட் கென்யான்' உலகின் ஆழமான பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இது 66 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் நீளம் 450 கி.மீ. அகலம் 29 கி.மீ. ஆழம் 1800 மீட்டர். இதன் வழியாக கொலராடோ நதி 2334 கி.மீ., துாரம் பாய்ந்து கலிபோர்னியாவில் கடலில் கலக்கிறது. பள்ளத்தாக்கின் முகட்டில் நின்று பார்த்தால் கொலராடோ நதி எளிதில் புலப்படாது. கூர்ந்து பார்த்தால் மெல்லிய வெள்ளி ரிப்பன் போல் தோன்றும். சுற்றுலா பகுதியாகவும் உள்ளது.

Advertisement