வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்ல வாகனம் ஏற்பாடு செய்ய கூடாது கலெக்டர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி: வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்ல வாகனம் ஏற்பாடு செய்ய கூடாது என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
ஓட்டுப்பதிவு வரும் 23ம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இன்று 21ம் தேதி மாலை 6:00 மணி முதல் ஓட்டுப்பதிவு நிறைவடையும் வரை கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது. தேர்தல் தொடர்பான செய்திகளை எவ்வித தகவல் தொடர்பு முறையிலும் வெளியிடக்கூடாது.
பிரசார காலம் முடிந்தபின், தொகுதி வாக்காளர்கள் அல்லாதவர்கள் அந்த தொகுதிக்குள் தங்கி இருக்க கூடாது. இதனை மாவட்ட நிர்வாகமும், போலீஸ் உறுதி செய்து நடவடிக்கை எடுக்கும். வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்லவோ, திரும்ப அழைத்து வரவோ எவ்வித வாகனங்களையும் ஏற்பாடு செய்ய கூடாது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
-
தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு