தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும் ரிஷிவந்தியம் ஜொலிக்கும்  :வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் உறுதி 

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் நேற்று ரிஷிவந்தியத்தில் இறுதிக்கட்டமாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக சென்று ஓட்டு கேட்டு பேசியதாவது;

பிரசாரத்தின் போது நீங்கள் தரும் ஆதரவை பார்க்கும்போது 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் எனக்கு நீங்கள் வெற்றியை பரிசளிப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன். இதுவரை எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை பெற்றுள்ளேன். 40 ஆண்டுகளுக்கு முன் ரிஷிவந்தியத்திலிருந்து சென்ற பி.டி.ஓ., அலுவலகத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளேன்.

ரிஷிவந்தியத்தில் பொறியியல் கல்லுாரி அமைக்கப்படும். காமராஜர் தெரு, கிழக்குத் தெரு அகலமான தார் சாலையாக தரம் உயர்த்தப்படும். அடுத்த தேர்தல் பிரசாரத்தின் போது ரிஷிவந்தியம் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும். மீண்டும் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் ரிஷிவந்தியம் ஜொலிக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும் என பேசினார்.

தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், ஆனந்த், துரைராஜ், இதயத்துல்லா, காங்., ராதாகிருஷ்ணன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement