அ.தி.மு.க., முழு பலத்தோடு வெற்றி பெறும் சங்ககிரி வேட்பாளரை ஆதரித்து இ.பி.எஸ்., பிர-சாரம்

சங்ககிரி; சங்ககிரி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் வெற்-றிவேலை ஆதரித்து, அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்., அங்குள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார்.


அப்போது, இ.பி.எஸ்., பேசியதாவது:சங்ககிரி விவசாயிகள் நிறைந்த பகுதி. கால்-நடை வளர்ப்பு அதிகம். கலப்பின பசுக்களை வளர்க்கிறோம். பால் கறந்து விற்பதன் மூலம் பல குடும்பங்கள் பிழைக்கின்றன. விவசாயி, விவசாய தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு பிழைக்-கிறார்கள்.
இதற்கு மாற்றுத்தொழிலாக, கலப்பின பசுக்களை விவசாயிகளுக்கு உருவாக்கி தந்து, கூடுதலாக பால் கறக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமெரிக்கா சென்று பார்வையிட்டேன். அங்கு தினமும் ஒரு பசு, 65 லிட்டர் பால் கறக்கிறது. அதேபோல் தமிழகத்தில் உள்ள விவசாயிக்கு, தொழிலாளிக்கு, நாம் கலப்பின பசுக்களை உரு-வாக்கி தர, அவர்களுடன் கலந்து பேசினேன். அதன்படி தலைவாசலில் கால்நடை பூங்கா அமைத்தோம். விவசாயம் செழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா கொண்டு வந்தேன். அது இப்-போது மூடிக்கிடக்கிறது. இந்த திட்டம் நிறை-வேற்றப்பட்டிருந்தால், விவசாயிகள் குடும்பம் செழித்திருக்கும். அதனால் நீங்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், ஒன்றிய செயலர்கள் காசிராஜன், ரத்தினம், பா.ம.க., மாநில துணை தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலர் செல்வகுமார், தலைவர் முத்துசாமி, பா.ஜ., மாவட்ட தலைவர் ஹரிராமன், அ.ம.மு.க., மாவட்ட செயலர் அய்-யனார்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement