க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
கரூர் : க.பரமத்தியில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், வளர்ந்து வரும் நகராக க.பரமத்தி உள்ளது. க.பரமத்தி பஞ்சாயத்து யூனியனில், 30 கிராம பஞ்சாயத்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி, கிராம பஞ்சாயத்துகள் அடங்கியுள்ளதால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது.
அப்போது, வாகனங்கள் தீ பிடித்து எரிந்தாலோ, தீ விபத்து ஏற்பட்டாலோ, அதை அணைக்கும் வகையிலும், உயிரிழப்புகளை தடுக்கவும், க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை.
இதனால், க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால், கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் எளிதாக செல்ல முடியாது. இதனால் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு