சிறப்பு ரயில்களில் முன்பதிவு முன்கூட்டியே தொடங்க கோரிக்கை

சேலம்; கூட்ட நெரிசலை குறைக்க உதவும் சிறப்பு ரயில்-களை திடீரென அறிவிக்காமல் முன்கூட்டியே அறிவித்து சில நாட்களுக்கு முன் முன்பதிவை தொடங்க
பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தமிழக பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் குழந்-தைகளுடன், ஆன்மிகம், சுற்றுலாத்தலங்களுக்கு செல்வோர், சொந்த ஊர்களுக்கு செல்வோர் என, பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து ரயில்களிலும், ஏப்ரல், மே மாத முன்-பதிவு, சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தன. பல்வேறு தடங்களில் சிறப்பு ரயில்களும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.ரயில்களில் பயணிக்க டிக்கெட் இல்லாமல் பலர் தவிக்கும் சூழலில், திடீரென அறிவிக்கும் சிறப்பு ரயில்களில் பயணியர் இல்லாமல் பல பெட்டிகள் காலியாக செல்லும் சூழல் நிலவுகிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பே சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்க, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது: அனைத்து வகை ரயில்களிலும் தட்கல் பயணத்-துக்கு கூட, ஒரு நாளுக்கு முன் டிக்கெட் முன்ப-திவு முடிந்து
விடுகிறது. இதனால் அடுத்த நாள் பயணிப்போர் யாரும் ரயில்களில் டிக்கெட் உள்ளதா என சோதிப்பதில்லை. கடந்த வாரம் சேலம் வழியே இயக்கப்பட்ட இரு சிறப்பு ரயில்களில், மாலையில் கிளம்பும் ரயிலுக்கு அன்று காலைதான் முன்பதிவு தொடங்கியது.
இதனால், 'ஏசி' பெட்டிகளில் பெரும்பாலான சீட்கள் நிரம்பவில்லை. பொது பெட்டியில் செல்-வோருக்கு மட்டும் பயனாக உள்ளது. ரயில்வே துறைக்கும் வருமானம் இல்லை. பயணிய-ருக்கும் பலனில்லை. இதனால் முன்கூட்டியே அறிவித்து முன்பதிவு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறப்பு ரயில் அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் - போத்தனுார் சிறப்பு ரயில், வரும், 22 மதியம், 3:10க்கு புறப்பட்டு அரக்-கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே இரவு, 11:30 மணிக்கு போத்தனுாரை அடையும். இரவு, 8:03க்கு சேலம், 9:15க்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், வரும், 23 இரவு, 11:30க்கு கிளம்பி, அடுத்-தநாள் காலை, 8:20க்கு சென்னை, சென்ட்ரலை அடையும். இரவு, 12:50க்கு ஈரோடு, 1:47க்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவையில் மாற்றம்
கரூர் -- திருச்சி இடையே தண்டவாள பராமரிப்பு, பொறியியல் பணியால், ஏப்., 18(இன்று), 20, 24 காலை, 6:30 மணிக்கு கிளம்பும் பாலக்காடு - -திருச்சி எக்ஸ்பிரஸ், கரூர் வரை மட்டும் இயக்-கப்படும். பராமரிப்பு பணி முடிந்த பின் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயி-லாக இயக்கப்படும். அதே நாட்களில் மதியம், 1:00 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு எக்ஸ்-பிரஸ் ரயில், பேட்டைவாய்த்தலை ஸ்டேஷ-னுடன் நிறுத்தப்படும். பணிகள் நிறைவடைந்த பின், அங்கிருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதி-வற்ற சிறப்பு ரயிலாக புறப்பட்டு செல்லும். இத்த-கவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement