கருப்பு என்பது காளி தேவியின் நிறம்: பார்லி.,யில் கனிமொழி பேச்சு
புதுடில்லி: ''கருப்பு என்பது காளி தேவியின் நிறம்'' என பிரதமர் மோடிக்கு, தி.மு.க., - எம்.பி., கனிமொழி பதிலளித்துள்ளார்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை, வரும் 2029 லோக்சபா தேர்தலுக்குள் அமல்படுத்த, மத்திய பா.ஜ., அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., வினர் கருப்பு உடையணிந்தும், சட்ட மசோதா நகலை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, பார்லிமென்டில் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற, தி.மு.க., - எம்.பி.,க்களும் கருப்பு உடை அணிந்து சென்றனர்.
லோக்சபாவில், இதை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, 'ஒரு நல்ல விஷயத்தை தொடங்கும் முன், தீய சக்தியின் கண் படாமல் இருக்க, கருப்பு திலகமிடும் பாரம்பரியம் உள்ளது. அதை செய்த தி.மு.க., வினருக்கு நன்றி' என, கிண்டலாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்து, லோக்சபாவில் தி.மு.க., - எம்.பி., கனிமொழி நேற்று பேசியதாவது: ஹிந்துத்துவாவை பாதுகாப்பதாக சொல்லும் பா.ஜ.,வுக்கு, கருப்பு தெய்வமான காளி நினைவில் இல்லை. காளியை மறந்து விட்டீர்களா? பெண் சக்தியை பறைசாற்றும் பெண் தெய்வமான காளியும் கருப்பு உடை தான் அணிந்துள்ளார். அவர் தான், அராஜகம் போன்றவற்றை விரட்டும் தன்மை கொண்டவர்.
அத்தகைய கருப்பு வண்ணத்தை தேர்வு செய்து, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் கடைசி வரை நாங்கள் போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (212)
Balakrishnan Ramamoorthy - CHENNAI,இந்தியா
21 ஏப்,2026 - 14:21 Report Abuse
கருப்பு சனியின் நிறம் 0
0
Reply
ஜெகதீஸ்வரன் தண்டபானி - Coimbatore,இந்தியா
21 ஏப்,2026 - 09:57 Report Abuse
உங்களை காளி தேவியை சொல்லுமாறு செய்த பெருமை பிஜேபி யை சாரும். பெரியார் கொள்கையை சுட்டி கட்டுபவர்கள் இப்போது காளியை துணைக்கு அளிக்கிறார்கள். ஓம் காளி ஜெய் காளி 0
0
Reply
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
21 ஏப்,2026 - 09:37 Report Abuse
படித்துவிட்டோமென்ற கர்வத்தில் காளிதேவியை அவமதித்து கோடனுக் கோடி நெஞ்சங்களை காயப் படுத்தியது யென்றும் மன்னிக்க முடியாத, மறக்க முடியாதச் செயல். சுயமரியாதையுள்ள மக்கள் இந்த தேர்தல் நேரத்தில் இவர்களுக்கு தகுந்த நல்ல பாடம் கற்றுத் தர வேண்டுமென்று மக்களிடம் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன். இல்லையென்றால் நம்மை நாம் மக்களென்று சொல்லி கொள்வதில் அர்த்தமில்ல. 0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
21 ஏப்,2026 - 08:18 Report Abuse
காரியம் ஆகணும்னா காளி தேவி காலை பிடிப்பீங்க. காரியம் முடிஞ்சா காளி தேவியின் காலையே வாரிவிடும் கூட்டத்தை சேர்நதவர் தானே என்று மக்களுக்கு தெரியும். அப்பாவுக்கு பொண்ணு தப்பாம பொறந்துருக்க. 0
0
Reply
Baskaran Ramasamy - CHENNAI,இந்தியா
21 ஏப்,2026 - 07:19 Report Abuse
தேர்தல் வந்தால் நாத்தீக வாதியான பெரியார் ஆண்மீகத்தில் வந்து காளியாக மாறிவிடுகிறார். தேர்தல் முடிந்தால் ஆண்மீகத்தை விட்டு விலகி நாத்திக வாதி பெரியாராக மாறிவிடுகிறார், மக்கள் இவர்களை நம்புவதுதான் வேடிக்கையாக உள்ளது 0
0
Reply
veeramani - karaikudi,இந்தியா
20 ஏப்,2026 - 09:41 Report Abuse
கடவுளே இல்லை. கடவுளை பற்றி பேசுபவன் காட்டுமிராண்டி..
இந்த நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு இந்து கடவுளை பற்றி என்ன தெரியும் 0
0
Reply
Ravi Kulasekaran - ,இந்தியா
19 ஏப்,2026 - 21:08 Report Abuse
திஷ்ட்டி பரிகாரம் கறுப்பு குழந்தைகளுக்கு கூட கறுப்பு பொட்டை வைப்பது தமிழ்மக்களின் பண்பாடு கனிமொழிக்கு தெரிந்து இருக்க நியாயமில்லை 0
0
Reply
Nithyanantham M - ,இந்தியா
19 ஏப்,2026 - 20:43 Report Abuse
இந்து கோயிலையிடிக்கும் உங்களுக்கு
காளியபத்தி பேச என்ன தகுதி இருக்கிறது 0
0
Reply
KAVIYARASAN N - ,இந்தியா
19 ஏப்,2026 - 19:01 Report Abuse
மசோதாக்களை முக்கியமாக மகளிர் மசோதாவை தனியாக தாக்கல் செய்யலாமே. ஏன் இன்னோன்றோடு பிணைத்து பித்தலாட்டம். பா. ஜ. க. வின் குள்ள நரித்தனம் வெளிப்பட்டுவிட்டது. அமித்ஷா வின் முகத்தில் ஈ ஆடவில்லை. திராவிடம் வெல்லும். 0
0
K V Ramadoss - Chennai,இந்தியா
19 ஏப்,2026 - 20:44Report Abuse
ஏதாவது புரிந்துதான் சொல்கிறாரா ? 0
0
Reply
கூத்தாடி வாக்கியம் - ,இந்தியா
19 ஏப்,2026 - 17:45 Report Abuse
உங்க டீம் அந்த காளி இல்ல 0
0
Reply
மேலும் 201 கருத்துக்கள்...
மேலும்
-
புதிய பஸ் நிலையத்தால் மக்கள் பாதிப்பு அ.தி.மு.க., ஆட்சியில் தீர்வு காணப்படும் வேட்பாளர் ராஜிவ்காந்தி உறுதி
-
ரிஷிவந்தியத்தை விட உளுந்துார்பேட்டை தொகுதி அதிக ஓட்டுகள் பெற வேண்டும் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் பேச்சு
-
தமிழக காங்., தலைவர் விரைவில் மாற்றம்?
-
திராவிட கட்சிகளின் தீவிர பிரசார அலை கரை ஒதுங்கிய த.வெ.க., - நா.த.க., - த.வா.க.,
-
போதை பொருள் தடுப்பு பயிற்சி முகாம்
-
புதுச்சேரியில் 95.2 டிகிரி வெயில் சாலைகள் வெறிச்சோடின
Advertisement
Advertisement