ரிஷிவந்தியத்தை விட உளுந்துார்பேட்டை தொகுதி அதிக ஓட்டுகள் பெற வேண்டும் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் பேச்சு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளர் வசந்தவேல், நகராட்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பைக்கில் பேரணியாக ஒன்று ஓட்டு சேகரித்தார். பேரணியில் பங்கேற்ற தி.மு.க.. மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் பேசியதாவது;
வசந்தவேல், 25 ஆண்டு காலமாக கட்சியில் உழைத்து கொண்டு இருக்கிறார். 60 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். ரிஷிவந்தியத்தைவிட உளுந்துார்பேட்டை தொகுதி அதிக ஓட்டுக்கள் பெறவேண்டும். வேட்பாளர் வசந்தவேல் வசதியானவர் இல்லை,12 ஏக்கர் நிலம் தான் உள்ளது.
எல்லாவற்றையும் இழந்து விட்டு ஓட்டு கேட்கிறார். அவர் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என பேசினார்.
வேட்பாளர் வசந்தவேல் பேசியதாவது; 2016 ஆண்டு உளுந்துார்பேட்டை தொகுதியில் எனக்கு வெற்றி தவறிவிட்டது. சோர்ந்து விடாமல் இருந்த எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு அளித்து வெற்றி பெற வைத்தால் தொகுதிக்கு தேவையான திட்டங்களை அதிகமாக கொண்டு வருவேன் என கூறினார்.
அதில், நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், முருகன், நகர செயலாளர் டேனியல் ராஜ், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், காங்., மாவட்ட தலைவர் இதயத்துல்லா, மாநில துணை செயலாளர் சீனிவாசன், கம்யூ. ஜெய்சங்கர், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு சீல் வைப்பு துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு
-
சிவகங்கையில் சுகாதார பணியில் தொய்வு * சாக்கடை கழிவால் நோய் பரவல்
-
பயணியர் நிழற்குடை இன்றி மக்கள் சிரமம்
-
பல ஆண்டுகளாக துார்வாரப்படாத கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ள அவலம்
-
இடுக்கியில் கொளுத்தும் வெயில் ஏலச் செடிகளுக்கு தண்ணீர் தெளிப்பு
-
தண்ணீர் தேடி திரிந்த புள்ளி மான் இறப்பு