தமிழக காங்., தலைவர் விரைவில் மாற்றம்?
- நமது நிருபர் -
வருமான வரித்துறை சோதனை விவகாரம் தொடர்பாக, தமிழக காங்., முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி ஆகியோரிடம், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கருத்து கேட்டதைத் தொடர்ந்து, தமிழக காங்., தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து, 'சீருடை இல்லாமல் வருமான வரித்துறையினர் என, சொல்லிக் கொண்டு, ஹிந்தி பேசும் நபர்கள், தன் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ராகுல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினார்.
நாடகம்
அவருக்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், முதல்-வர் ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால்,'செல்வப்பெருந்தகை கூறியது போல், அவரது வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
'ராகுல் பேச்சை தவறுதலாக, செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்ததால், அவர் பிரசாரத்திற்கே வரக்கூடாது என, ராகுல் கூறியுள்ளார். அதை மறைக்க, செல்வப்பெருந்தகை நாடகம் ஆடுகிறார்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனரிடம் வருமான வரித்துறை தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவும், வருமான வரித்துறை வலியுறுத்தி உள்ளது.
'அப்செட்'
இந்நிலையில், சென்னைக்கு நேற்று முன்தினம் வந்த கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி ஆகியோரிடம், வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக சொல்லப்படும் விவகாரத்தில், யார் சொல்வது உண்மை என விசாரித்துள்ளார். அவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துகளை, ராகுலிடம் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை செயலால், ராகுல் 'அப்செட்' ஆகி உள்ளார். எனவே, சட்டசபை தேர்தலுக்கு பின், தலைவர் பதவியிலிருந்து செல்வப் பெருந்தகை மாற்றப்படுவார் என, எதிர் கோஷ்டியினர் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என, செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செத்துப்போன கட்சியை எந்த பெட்டியில் வைத்தால் என்ன
டாணா பானா தூக்கத்தான் லாயக்கு.
நடு கூடத்தில் ஏன் வைத்தார்கள் .
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நல்லவர் யாரும் இல்லையா?
தமிழக காங்கிரஸின் சாபக்கேடு. யாரை எங்கே வைக்கவேண்டும் என்று தெரியவில்லை.
எடப்பாடி விடியலுக்கு அனுப்பி வைத்த ஸ்லீப்பர் செல்களில் இவரும் ஒன்று ......ப்ரெம் மேடம் மற்றும் டெல்லி இத்தாலியும் எடப்பாடி அனுப்பிய ஸ்லீப்பர் செல் தான் ......விடியல் கூட்டணியே ஸ்லீப்பர் செல்களில் கல கலத்து போயுள்ளது ....
அனுமதிக்கப்பட்ட சலுகையை இது போன்ற பலர் தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இன்னொருவர் பிரதமரை தீவிரவாதி என்கிறார். ஒருவர் பிரிவை முன்னேற்றருவதக 25 வருடம் அரசியல் செய்துகொண்டு ஒரு கட்சிக்கு அடிமையாக இருக்கிறார். என்ன செய்வது? தலையெழுத்து.
திறமையற்ற அரசியல்வாதியை காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவராக்கியதை கால தாமதமாக அக்கட்சி உணர்ந்துள்ளது. திமுகவின் பிடியில் இருக்கும் வரை வளர்ச்சி கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு கொள்கை பாஜகவை எதிர்ப்பது மட்டும்தானா ?
அப்படி ஒருவேளை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இந்த செல்வச் சிறுந்தொகை மாற்றப் பட்டால் உடனே அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகி விடுவார் என்பது உறுதி.மேலும்
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா