திராவிட கட்சிகளின் தீவிர பிரசார அலை கரை ஒதுங்கிய த.வெ.க., - நா.த.க., - த.வா.க.,
விழுப்புரம் மாவட்டத்தில், திராவிட கட்சிகளின் பிரசார அலையில் சிக்கிய நா.த.க., - த.வெ.க., - த.வா.க., வேட்பாளர்கள் கரை ஒதுங்கி தவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திருக்கோவிலுார், வானுார் ஆகிய 5 தொகுதிகளில் தி.மு.க., வும், கூட்டணி கட்சிகளான வி.சி., திண்டிவனத்திலும், தே.மு.தி.க., மயிலத்திலும் போட்டியிடுகிறது.
அ.தி.மு.க., விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, வானுார், மயிலம் ஆகிய 5 தொகுதியிலும், பா.ம.க., செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதியிலும் போட்டியிடுகிறது. சம பலத்துடன் இரு கூட்டணி கட்சிகளும் மோதுகிறது.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, வி.சி., தலைவர் திருமாவளவன், தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா, மா.கம்யூ., பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன், திருச்சி சிவா எம்.பி., போன்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பொதுச் செயலாளர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, சினிமா நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், முன்னாள் அமைச்சர் சண்முகம் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
வேட்பு மனுவைத் தொடர்ந்து, தி.மு.க., மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் புடை சூழ, ஒன்றியங்கள் வாரியாக திட்டமிட்டு, கிராமங்கள் தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தாராளமாக செலவு செய்து, கட்சி சின்னங்கள், சாதனை பிரசுரங்களுடன் திரண்டு வீதி, வீதியாக பிரசாரம் செய்தனர்.
இவர்களுடன் போட்டிக்கு களமிறங்கிய நடிகர் விஜயின் த.வெ.க., சீமானின் நா.த.க., வேல்முருகனின் த.வா.க., வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள், கூட்டணி படை பலமின்றி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால், பெரிதளவில் பொது மக்களிடம் அவர்களது பிரசாரம் போய் சேரவில்லை.
நடிகர் விஜய், சீமான், வேல்முருகன் போன்ற அக்கட்சியின் தலைவர்களும், அக்கட்சி மாநில நிர்வாகிகள் கூட பிரசாரத்திற்கு வராததால், வேட்பாளர்கள் உள்ளூர் நிர்வாகிகளுடன் தனிமையில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
திராவிட கட்சிகளின் பிரமாண்ட பிரசாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவர்கள் திணறினர்.
இவர்கள் பிரசாரம் பெரிய அளவில் இல்லையென்றாலும் இவர்களது ஓட்டு வங்கி திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.
-நமது நிருபர்-:
மேலும்
-
ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு சீல் வைப்பு துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு
-
சிவகங்கையில் சுகாதார பணியில் தொய்வு * சாக்கடை கழிவால் நோய் பரவல்
-
பயணியர் நிழற்குடை இன்றி மக்கள் சிரமம்
-
பல ஆண்டுகளாக துார்வாரப்படாத கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ள அவலம்
-
இடுக்கியில் கொளுத்தும் வெயில் ஏலச் செடிகளுக்கு தண்ணீர் தெளிப்பு
-
தண்ணீர் தேடி திரிந்த புள்ளி மான் இறப்பு