உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரி துறைக்கு அவகாசம்
சென்னை: துணை முதல்வர் உதயநிதி, வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்கள் தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிட கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி, தன் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்களுக்கும், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தாக்கல் செய்த சொத்து விபரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன என, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான ஆர்.குமாரவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி, 'உதயநிதியின் வருமானவரி கணக்கு விபரங்கள் மட்டுமே எங்கள் வசம் உள்ளன. கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க, அவகாசம் வழங்க வேண்டும்' எனக் கூறி, முந்தைய உத்தரவின்படி இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர். இதை ஏற்ற நீதிபதிகள், வருமானவரித்துறைக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (1)
Mani . V - Singapore,இந்தியா
21 ஏப்,2026 - 05:14 Report Abuse
ஒன்னும் அவசரமில்லை மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் எசமான்களே. முடிந்தால் 2056 ஆம் ஆண்டு விசாரிக்க அனுமதி கொடுத்தால் போதும். 0
0
Reply
மேலும்
-
அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக 'செல்பேசி' செயலி: பாலு வாக்குறுதி
-
கோவில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: பக்தர்கள் அவதி
-
வரும் 1ல் 'மெட்ரோ' பயணியர் அட்டை சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்
-
வாக்குறுதிகளை தாமதமின்றி நிறைவேற்றுவேன்: ஐ.ஜே.கே.,வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
-
தொகுதி வளர்ச்சியை பார்த்து மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள்: காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா பிரசாரம்
-
தொகுதி வளர்ச்சிக்கு மீண்டும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்: செந்தமிழன்
Advertisement
Advertisement