மொசாம்பிக் நாட்டுக்கு ரயில் இன்ஜின்கள் ஏற்றுமதி

சென்னை: உத்தர பிரதேச மாநிலம் பனாரஸில், ரயில் இன்ஜின் தொழிற்சாலை உள்ளது. இங்கு, நவீன ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து, 3,300 குதிரைத்திறன் கொண்ட, 10 ரயில் இன்ஜின்களை, மொசாம்பிக் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய, சில ஆண்டுகளுக்கு முன், பனாரஸ் ரயில் இன்ஜின் தயாரிப்பு ஆலை, 'ஆர்டர்' பெற்றது.

கடந்த ஆண்டிலிருந்து ரயில் இன்ஜின்கள் அனுப்பப்பட்டன. கடைசியாக இரண்டு ரயில் இன்ஜின்கள், நேற்று முன்தினம் கப்பலில் அனுப்பப்பட்டன. இதன் வாயிலாக, ரயில்வேக்கு 300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement