பல்லடத்தில் நெரிசல்

பல்லடம்: ஜனநாயக கடமையாற்றுவதற்காக, சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்கள் பலரும், நேற்று மாலை முதலே பல்லடம் பஸ் ஸ்டாண்டில் குவிய துவங்கினர். மதுரை, திருச்சி, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், ஏற்கனவே கூட்ட நெரிசலுடன் வர, வேறு வழியில்லாமல், தொழிலாளர்கள் நின்றபடியே பஸ்களில் பயணித்தனர். மேலும், பஸ்களில் இடம் கிடைக்காமல்,

ஏராளமான பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். கோவையில் இருந்து வந்த பஸ்கள் வழக்கம்போல், பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் ரோட்டிலேயே நின்று செல்ல, பொதுமக்களும், பஸ் ஸ்டாண்டை தவிர்த்து ரோட்டில் குவிந்தனர். இதனால், பஸ் ஸ்டாண்ட் முன், தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முழுவதையும் பொதுமக்களே ஆக்கிரமித்திருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட, அண்ணா நகரில் இருந்தே வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இவ்வாறு, சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களால், போக்குவரத்து நெரிசல் ஒருபுறம், மக்கள் நெரிசல் ஒருபுறம் என, பல்லடம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Advertisement