திண்டிவனம் வி.சி., வேட்பாளருக்கு ஆதரவு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தரப்பு பிரசாரம்
திண்டிவனம் வி.சி., வேட்பாளருக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆதரவு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் (தனி) தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., வேட்பாளராக வன்னி அரசு போட்டியிடுகிறார். அ.தி.மு.க., வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ., அர்ஜூனன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மரக்காணம் ஒன்றிய தி.மு.க., செயலாளரான சேர்மன் தயாளன் தலைமையில் வி.சி., வேட்பாளர் வன்னி அரசு மனைவி ஆதிரை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மரக்காணம் கிழக்கு ஒன்றிய பா.ம.க., செயலாளர் குமரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டனர்.
இதையடுத்து திண்டிவனம் தொகுதியில், வி.சி., வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக பா.ம.க., ஒன்றிய செயலாளர் குமரன் உறுதியளித்தார். பின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆதரவுபெற்ற வி.சி., வேட்பாளர் வன்னி அரசு வெற்றிக்கு பணியாற்றுவோம் என பா.ம.க., செயலாளர் குமரன் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலை தளங்களில் 'போஸ்ட்' அனுப்ப துவங்கி உள்ளனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், சசிகலா கூட்டணி சார்பில், தி.மு.க., கூட்டணி மற்றும் அ.தி.மு.க., கூட்டணியை எதிர்த்து பல தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் படத்தை, அன்புமணி தரப்பினர் தேர்தலில் பயன்படுத்த தடை கோரி, கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தொகுதிக்கு தொகுதி மாறுபட்ட நிலைப்பாட்டை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் எடுத்து வருகின்றனர்.
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணைந்தால், வி.சி., வெளியேறிவிடும் என்கிற சூழல் நிலவியது.
கூட்டணியில் பா.ம.க.,வை சேர்க்க விரும்பாத வி.சி., கட்சிக்கு அழையா விருந்தாளியாக ராமதாஸ் தரப்பினர் ஆதரவு அளித்துள்ளது திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-நமது நிருபர்-
மேலும்
-
விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு; ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
சோதனை என்கிறார் செல்வப்பெருந்தகை; இல்லை என்கிறது வருமான வரித்துறை
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
-
கருத்துக்கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் வெல்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சர்ச், மசூதி, கோயிலில் விஜய் வழிபாடு
-
மது பாட்டிலில் ரூ.10 ஸ்டிக்கர் காணோமுங்க; தேர்தல் நேரம் என்பதால் தவிர்ப்பு