மது பாட்டிலில் ரூ.10 ஸ்டிக்கர் காணோமுங்க; தேர்தல் நேரம் என்பதால் தவிர்ப்பு
கோவை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கோவையில் உள்ள பெரும்பாலான 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் ரூ.10 'ஸ்டிக்கர்' இன்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவது பேசுபொருளாக மாறியுள்ளது. 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் மது வாங்குபவர்கள், காலி மதுபாட்டில்களை கொடுத்துவிட்டு ரூ.10 பெறும் திட்டம், இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர், அத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடர்புபடுத்தி விமர்சித்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அமைச்சருக்கு எதிரான பிரசாரத்தில் 'பத்து ரூபாய்' சமாச்சாரம் தவறாமல் இடம் பிடித்து விடுகிறது. இந்நிலையில், 'ரூ.10 ஸ்டிக்கர்' இல்லாமல் கோவையில் உள்ள பெரும்பாலான 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் மது விற்பனை நடக்கிறது.
தேர்தல் சமயத்தில் ஸ்டிக்கர் ஒட்டினால், தி.மு.க., மீது அதிருப்தி ஏற்படுமோ என்ற எண்ணத்தில் இந்த ஸ்டிக்கர் தவிர்க்கப்படுவதாக, எதிர்க்கட்சியினர் கிண்டலாக கூறுகின்றனர். 'ஏற்கனவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இப்படியிருக்க பாட்டிலை திரும்ப பெற, 'க்யூ ஆர் கோடு' மற்றும் கடை எண் உடன் ரூ.10 'ஸ்டிக்கர்' ஒட்டி தரப்பட்டது. இதனால் கடைகளில் குடிமகன்கள் வாக்குவாதம், போலீசார் தாக்குவது போன்ற செயல்கள், அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களாக இந்த ஸ்டிக்கரை ராமநாதபுரம், காந்திபுரம், புலியகுளம், ஒண்டிப்புதுார் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காணவில்லை. புறநகர் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. தி.மு.க.,வினர் சிலரிடம் பேசியபோது, 'ஏற்கனவே 'பத்து ரூபா பாலாஜி'ன்னு எங்க வேட்பாளருக்கு பேரு வச்சிருக்காங்க.
எலக்ஷன் நேரத்துல அந்த பாட்டிலை மேடையில காட்டி எதிர்க்கட்சிக்காரங்க பேசுவாங்களோன்னு ஒரு பயம். அதான் ஸ்டிக்கர் ஒட்டுறதை அவாய்டு பண்ண சொல்லியிருக்கறதா தகவல்; எதுக்கு வீண் வம்பு' என்றனர்.'டாஸ்மாக்' அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சில கடைகளில் இந்த ஸ்டிக்கர் இல்லை. பெரும்பாலான கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டியே விற்கப்படுகிறது' என்று சமாளித்தனர்.
மனமகிழ் மன்றம் சென்று குவாட்டர் ஆஃப் புல் எது வாங்கினாலும் பத்து ரூபாய் ஸ்டிக்கர் இருக்காது..... ஆனால் டாஸ்மாக் கடையில் என்ன விலையோ அதே விலையில் விற்று தீர்ந்து விடுவார்கள்.....
நுப்பூர் சர்மா பேசியதற்கு கொந்தளித்த நீதிபதிகள்...
இந்த அநியாயத்தை எல்லாம் பார்த்துக் கொண்டு சாப்பிட்டு தூங்குகிறார்களோ
பத்து ரூபாய் பாலாஜி தோற்றால்தான் ஜனநாயகத்துக்கு வெற்றி
பத்து தோல்வி பழனிசாமி தோற்றால் தமிழ்நாட்டுக்கு நலம்
டாஸ்மாக் கடைகள் மூடுவோம் என்று பாஜக அதிமுக கூட்டணி இதுவரை வாக்குறுதி அளிக்கவில்லை. எல்லாம் ஏமாற்று வேலை.
தப்பித்தவறி அஞ்சு கட்சி அமாவாசை செ பாலாஜி வென்றால் பாட்டிலுக்கு இருபதா உயரும். குடிமகன்கள் ஜாக்கிரதை.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் மதுப்பிரியர்களுக்குத்தானே திருப்பிக்கொடுக்கிறார்கள். இதனால் உமக்கு ஏனிந்த எரிச்சல்?மேலும்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
-
திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது
-
ஓட்டுச்சாவடிகளில் பல வண்ணங்களில் குறியீடு; வாக்காளர்களின் சிரமத்தை தவிர்க்க ஏற்பாடு