மொபைல்போன் டவரில் ஏறி மெக்கானிக் தற்கொலை மிரட்டல்
பெண்ணாடம்: மொபைல் போன் டவரில் ஏறி, மெக்கானிக் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்ணாடம் போலீசார் கடந்தாண்டு, பைக்கில் மதுபாட்டில் கடத்திய சேட்டு, 45, சக்திவேல், 27, இருவரை கைது செய்தனர். பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த பைக், தெற்கு ரத வீதியை சேர்ந்த மெக்கானிக் ஜாஸ்மின் என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது.
எனவே, பைக்கை தன்னிடம் ஒப்படைக்கும்படி, போலீசாரிடம் ஜாஸ்மின் கேட்டு வந்தார். அதற்கு போலீசார், கடலுார் கலால் போலீசில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த ஜாஸ்மின் நேற்று மாலை 6;00 மணியளவில் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள 150 அடி உயரமுள்ள மொபைல் போன் டவரில் ஏறி பைக்கை தருமாறு கூறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ஜாஸ்மினிடம் சமாதானம் பேசி, மாலை 6:30 மணியளவில் இறங்க செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு