100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, 2,500 பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும், 23ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாணவ, மாணவியர், வணிகர்கள், பொதுமக்கள் உள்பட, 2,500 பேர் கலந்து கொண்ட, தேர்தல் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:மாவட்ட நிர்வாகம் சார்பில், 100 சதவீத விழிப்புணர்வை வலியுறுத்தி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடக்கும் விழிப்புணர்வு பேரணியின் நோக்கம், அனைவரும் நேர்மையாக மனசாட்சி படி ஓட்டளிக்க வேண்டும். தேர்தல் நாளில் அனைவரின் விரலிலும் ஓட்டுப்போடத்தற்கான மை இருக்க வேண்டும். அனைவரும் தங்கள் உறவினர், சுற்றத்தாரையும் ஓட்டுப்போட வலியுறுத்த வேண்டும் என்பதாகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கிய பேரணி, ராயக்கோட்டை சாலை, பஸ் ஸ்டாண்ட், பழையபேட்டை, டி.பி.சாலை, காந்தி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், தர்மராஜா கோவில் சாலை, பெங்களூரு சாலை, லண்டன்பேட்டை வழியாக மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு