தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு ஓய்ந்தது; நாளை மறுநாள் ஓட்டு போட தயாராகுங்கள்
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடக்க உள்ள 152 தொகுதிகளிலும், இன்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
1brதமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல், 23ம் தேதியும்; இரண்டாம் கட்ட தேர்தல், 29ம் தேதியும் நடக்க உள்ளன.தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பை, தேர்தல் கமிஷன் மார்ச் 15ல் வெளியிட்டது.
புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் இம்மாதம் 9ல் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரும் 23ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.









நான்கு முனை போட்டி
தமிழக தேர்தல் களத்தில் 3,579 ஆண்கள்; 443 பெண்கள்; ஒரு திருநங்கை என, 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கொளத்துார் தொகுதியிலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இடைப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ரொக்கமாக கவனிக்கும்' பணி
அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள், கொளுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களை, 'கவனிக்கும்' பணி, அனைத்து தொகுதிகளிலும் நடந்து வருகிறது. ரொக்கமாக 500 முதல், 5,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இது தவிர, தங்க நாணயம், மூக்குத்தி, வெள்ளி கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள், வேட்டி, சேலை என இலவச பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு, வரும் 23ல் தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. முதல்வர் ஸ்டாலின் சென்னையிலும், அண்ணாமலை கோவையிலும், சீமான் காரைக்குடியிலும், விஜய் சென்னையிலும் கடைசி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு, வரும் 29ல் தேர்தல் நடக்கிறது. இங்கு, திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., - கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என, நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஐந்து மாநில தேர்தல்களில் பதிவான ஓட்டுகளும், மே 4ல் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
@block_B@
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:
* சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும். இன்று மாலை 6:00 மணியிலிருந்து, ஓட்டுப்பதிவு முடியும் வரை, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது
* தேர்தல் தொடர்பான எந்த விஷயத்தையும், திரைப்படம், 'டிவி' ரேடியோ, வாட்ஸாப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடக்கூடாது. எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு தகவல் தொடர்புக்கும் இது பொருந்தும்
* தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர், இன்று மாலை 6:00 மணிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும்
* திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்
* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் அனுமதி மற்றும் வாகன அனுமதி, இன்று மாலைக்கு மேல் செல்லாது
* ஓட்டுப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு ஒரு வாகனம்; தேர்தல் ஏஜன்டுகள் பயன்பாட்டிறகு ஒரு வாகனம்; தேர்தல் ஏஜன்ட் பணியாளர் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.block_B
- நமது நிருபர் -
பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், சிறுபான்மை மத்திய அரசு வழங்கிய தரவுகளுக்கும் சென்று பாருங்கள். அதில், பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களும் எல்லா வகையிலும் மிக மோசமாக இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவால அடிமைகள் இப்படி பொய்யான செய்தியை பரப்பி தங்கள் கடைசிகட்ட பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர்
நாங்கள் ஓட்டளித்து எங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விடுவோம். அதே போல நீங்களும் தேர்தல் அலுவலர்களும் தேர்தலை நியாயமான முறையில் எந்தவிதமான தில்லுமுல்லு நடக்க விடாமல் நடத்தி, வோட்டு பெட்டிகளை பத்திரமாக பாதுகாத்து, நேர்மையாக வாக்கு எண்ணிக்கையை நடத்தி கொடுக்குமாறு பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
வோட்டு போட நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே போல் பணப்பாட்டுவாடாவை தடுக்க தேர்தல் அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும். மாலை 4 மணிக்கு மேல் நடக்கும் தில்லுமுழல்களை தடுக்க அவர்கள் தயாராகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டுபோடுவது தங்கள் கடமை என்பதை உணர்ந்து வாக்களிக்கவேண்டும். நல்ல அரசும் நல்ல ஆளுமையும் வசதிகளும் வேண்டுமென்பதை உணரவேண்டும், தவிறினால், நீங்கள் ஆதரிக்கவேண்டிய கட்சிக்கு பதிலாக வேறு கள்ள ஒட்டு நீங்கள் விரும்பாத கட்சிக்கு போவதை தடுத்து நிறுத்துவற்காவது கண்டிப்பாக வாக்களியுங்கள். தவிறினால் தீமையையே எதிர்நோக்கும் நிலை உருவாகும்.
தமிழக மக்களே தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள். உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.
- பெண்கள் பாதுகாப்பு இருக்குகிறதா
- போதை பொருட்களால் ஏற்படும் கற்பழிப்புகள் மற்றும் கொலைகள்
- அளவிற்க்கு அதிகமாக தலை விரித்தாடும் லஞ்சங்கள்
- வேலை இல்லாமல் தவிர்க்கும் பட்டதாரிகள் - படிப்பிற்கு ஏற்ற சம்பளங்கள் இருக்கிறதா
- விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுகள்
- எங்கு பார்த்தாலும் ஒரே புகை மண்டலமாக இருக்கும் தூசிகள் நிறைந்த சாலைகள் மற்றும் கழிவு நீர் கலக்கும் குடி தண்ணீர்
ஒரு அடிப்படை வசதிகளை கூட செய்து தரமுடியாத இந்த DMK மற்றும் ADMK அரசாங்கள் நமக்கு தேவையா .
மாற்றம் தேவை . இந்த ஒரு முறை வாக்களியுங்கள் TVK விசில் சின்னத்திற்கு .
ஈவேரா-தான் கொள்கை தலைவன் என்ற பிறகு, பெண்களின் பாதுகாப்பு, இந்துமத துவேஷம், கொலை, கொள்ளை,லஞ்சம் போதை கலாசார சீரழிவு போன்ற திக, திமுகவினரின் அன்றாட செயலுக்கும் TVK- க்கும் என்ன வித்தியாசம் வரும்..
தமிழனின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.மேலும்
-
மின்சார வாகன காத்திருப்பு காலம் 1 மாதம் வரை அதிகரிப்பு
-
கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை
-
செங்கையில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு... கொஞ்சமும் அக்கறை காட்டாத மாவட்ட நிர்வாகம்
-
இன்று இனிதாக ... (22.04.2026) கோவை
-
காங்.,ல் பூசல் இல்லை வேட்பாளர்கள் மறுப்பு
-
ஆபத்தான இடத்தில் அரசு பள்ளி மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயக்கம்