உத்தரகோசமங்கை முதல் இதம்பாடல் வரை பசுமை சாலையாக மாற்ற கோரிக்கை
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கையிலிருந்து இதம்பாடல் வரை 10 கி.மீ., தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நட்டு பசுமை சாலையாக மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த சாலையின் இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் ஏதுமின்றி வெட்ட வெளியாகவே உள்ளது. இதனால் கோடை காலங்களில் அப்பகுதி சாலை வெயிலின் தாக்கத்தால் கானல்நீராகவே காட்சி தெரிகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை இணைந்து சாலையோரங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்தால் 10 கி.மீ., தொலைவிற்கு பசுமைச் சாலையாக மாறும்.
இவ்விஷயத்தில் தேர்தலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து இதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
Advertisement
Advertisement