சித்திரை திருவிழா கொடியேற்றம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோயிலில் சித்திரைப் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான சொக்கநாதசுவாமி, மீனாட்சி அம்பிகை கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படும். நிகழாண்டு விழா வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க நேற்று காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.28, காலை 9:30 மணிக்கு நடைபெறும். தினமும் அபிேஷக அலங்கார பூஜையும், இறுதி நிகழ்வாக ஏப்.30ல் சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெறவுள்ளது.
---
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement