அமைச்சருக்கு ஆதரவாக விவசாயிகள் பிரசாரம்  

கடலுார்:குறிஞ்சிப்பாடியில் தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வதற்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினர் பிரசாரம் செய்தனர்.

குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து, கடலுார் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள் நேற்று குறிஞ்சிப்பாடி நகரில் பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரித்தனர். நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினர்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜ், மண்டல தலைவர் தமிழ்வாணன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சரவணன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement