தேர்தல் பாதுகாப்பு பணி: மேலிட பார்வையாளர் அறிவுரை

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து துணை ராணுவம் மற்றும் வெளிமாநில போலீசாருக்கு, போலீஸ் துறை பார்வையாளர் அறிவுரை வழங்கினார்.

கடலுார் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்தாய்வு கூட்டம், மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் துறை மேலிட பார்வையாளர் ஹேமந்த் குட்டியால் பங்கேற்று துணை ராணுவ படையினர் மற்றும் வெளிமாநில போலீசாருக்கு தேர்தல் பாதுகாப்பு பணியை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.

ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி மற்றும் டி.எஸ்.பி.,க்கள், மத்திய துணை ராணுவ படையினர், வெளிமாநில போலீசார், தேர்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement