அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் பிரசாரம்
பண்ருட்டி: பண்ருட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் பிரசாரம் செய்தார்.
பண்ருட்டி நகரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் மோகனுக்கு, ஆதரவாக முன்னாள் அமைச்சர் சம்பத் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசுகையில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய், மகளிர் தொகை 2,000 ரூபாய் வழங்கப்படும். தமிழகம் போதை கலாச்சார மாநிலமாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பான ஆட்சி.
பண்ருட்டி தொகுதி மோகன் மக்களுக்கு அறிமுகமானவர், எளிமையானவர். பாமர மக்கள் கூட உடனடியாக அணுககூடியவர். தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகள் முழுமையும் அறிந்தவர். வேட்பாளர் மோகனை பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.
நகர அவை தலைவர் ராஜதுரை, முன்னாள் நகர செயலாளர் முருகன், ஜெ., பேரவை நகர செயலாளர் செல்வம், நகர இணை செயலர் சத்யாகலைமணி, முன்னாள் இளைஞரணி ஸ்ரீதர், பா.ஜ., வினோத்குமார், முன்னாள் நகர தலைவர் மோகன், பா.ம.க., மாவட்ட தலைவர் கவுரிசங்கர், நகர செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
மேலும்
-
பழமையான பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம்: மண் ஆய்வு பணிகள் துவக்கம்
-
மானாமதுரை வாரச்சந்தை வெள்ளிக்கிழமைக்கு மாற்றம்
-
மதுராந்தகம் -- மேல்மா இடையே நகர பேருந்து இயக்க கோரிக்கை
-
கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை
-
கல்பாக்கம் மீனவர்கள் ஓட்டளிக்க ஜாமின் நிபந்தனை தளர்வு
-
சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது