மானாமதுரை வாரச்சந்தை வெள்ளிக்கிழமைக்கு மாற்றம்

மானாமதுரை;மானாமதுரையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த வாரச் சந்தை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

மானாமதுரையில் வாரம்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு மதுரை,சிவகங்கை, திருப்புவனம் திருப்பாச்சேத்தி பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகை தந்து காய்கறிகள் பழங்கள் மளிகை சாமான்கள் துணிகள் மீன்கள் கருவாடு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர் இவற்றை வாங்குவதற்காக மானாமதுரை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நடைபெற இருந்த வாரச்சந்தை நாளை வெள்ளிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டு நாளை அனைவரும் வாரச்சந்தையில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

////

Advertisement