சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது
சின்னமனூர்:சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.
சின்னமனூரில் பிரசித்தி பெற்ற பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது. இந்த விழாவிற்கான கொடியேற்றம் ( ஏப். 21 ) காலை நடந்தது. காலை தேருக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. தொடர்ந்து 18 நாட்களுக்கு மண்டகப்படி நடைபெறும். ஒவ்வொரு நாளும் சுவாமிகும் அம்மனும் விதவிதமான அலங்காரதில் பவனி வருவார்கள்.
ஏப். 28 ல் காலை 10:35 முதல் 11:45 மணிக்குள் சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். ஏப். 29 ல் சுவாமியும், அம்மனும் திருத்ததேரில் எழுந்தருள்வார்கள். அன்று மாலை 5 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். மறுநாள் ஏப். 30 ல் காலை 9:30 முதல் 10:00 மணிக்குள் வடம் பிடித்தல் நடைபெறும். தொடர்ந்த மாலை தேர் நிலைக்கு வந்து சேரும். தொடர்ந்து ஏப். 8 வரை மண்டகப்படி நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது.