மதுராந்தகம் -- மேல்மா இடையே நகர பேருந்து இயக்க கோரிக்கை

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் இருந்து புதுப்பட்டு வழியாக மேல்மா இடையே நகர பேருந்துகள் இயக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் அருகே புதுப்பட்டு, சாத்தமை, மேல்மா உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த சிலர், மதுராந்தகம் டவுன் பகுதிக்கு சென்று, அங்கிருந்து செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற நகரங்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் பணிக்கு சென்று வருகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மேல்மா, சாத்தமை உள்ளிட்ட பகுதிகளுக்கு, மதுராந்தகம் பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள், 4 கிலோ மீட்டர் துாரம் இருசக்கர வாகனங்களில் பயணித்து, புதுப்பட்டு பகுதிக்கு சென்று, அங்கிருந்து பேருந்துகள் மூலமாக நகரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, மதுராந்தகத்தில் இருந்து புதுப்பட்டு வழியாக மேல்மா வரை நகர பேருந்துகள் இயக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே,போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement