டிப்பர் லாரி மோதி தொழிலாளி சாவு

அதியமான்கோட்டை: தர்மபுரி அடுத்துள்ள புழுதிக்கரை கிராமத்தை சேர்ந்த கூலித்தொ-ழிலாளி சின்னராஜ், 55. இவரது மனைவி லட்சுமி, 46. தம்ப-திக்கு, 3 பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்-தினம் மதியம், 12:00 மணிக்கு தர்மபுரி தடங்கம் சிப்காட் பகுதி சாலை பணியில், சின்னராஜ் ஈடுபட்டிருந்தார்.


அப்போது, அங்கிருந்த டிப்பர் லாரியை, அதன் டிரைவர் ரிவர்ஸ் எடுத்த போது, பணியில் ஈடுபட்டிருந்த சின்னராஜ் மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்தவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சின்னராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement