ஐம்பது நாட்களாகியும் நடக்காத உச்ச தலைவரின் இறுதி சடங்கு

19

டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, 86, படுகொலை செய்யப்பட்டு, 50 நாட்களுக்கு மேலாகியும், அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் உள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது, கடந்த பிப்., 28ல் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. போரின் முதல் நாளிலேயே, அந்நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும் இதுவரை அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் உள்ளது.

ஈரானிய அதிகாரிகள் ஒரு பிரமாண்டமான அரசு மரியாதையுடன் கமேனியின் இறுதிச் சடங்கை நடத்த விரும்புகின்றனர். ஆனால், அத்தகைய கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இறுதி சடங்கு நடத்துவது தள்ளிப் போடப்படுவதாக கூறப்படுகிறது.

அதுவரை அவரின் உடல், ரகசிய இடத்தில் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் என கூறப்படுகிறது.

Advertisement