மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும்' : சி.வி.சண்முகம் உறுதி
'தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும்' என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி நிச்சயம் அமையும். அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். கடந்த கால அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும்.
படித்த ஏழை பெண்கள் திருமணத்திற்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்படும்.
அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும்.
அம்மா மினி கிளினிக் மீண்டும் செயல்படுத்தப்படும்.
மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படும்.
படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு உதவித்தொகை வழங்கப்படும்.
ஏழை மக்களின் வரப்பிரசாதமாக இருந்த அம்மா உணவகம், புதிய பொலிவுடன் கூடுதல் இடங்களில் திறக்கப்படும்.
மகளிருக்கு கறவை மாடு, ஆடுகள், கோழிகள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.
என்னால் முடிந்த உதவிகளை பொதுமக்களுக்கு செய்வேன் மயிலம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மு கம், திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்து வருகிறார். மயிலம், ஒலக்கூர், வல்லம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்களில் அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுபோட்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்குத் தங்கம், அம்மா இருசக்கர வாகன மானிய உதவி, அம்மா உணவகம் ஆகிய நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், அரசு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 2,000 ரூபாய் நிதி அளிக்கப்படும். தொகுதிக்கு தேவையான அடிப்படை வளர்ச்சிப் பணிகளை செய்து தருவேன். பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பேன்.
பொதுமக்களுக்கு என்னால் முடிந்த அளவில், எனது சக்திக்கு உட்பட்டு அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்திட, மயிலம் தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு