தி.மு.க., அரசின் நலத்திட்டங்களை கூறி அமைச்சர் சாமிநாதன் ஓட்டு சேகரிப்பு

காங்கேயம்:காங்கேயம் சட்டமன்ற தொகுதி காங்கேயம் நகரம் தொட்டியபட்டி, கே.ஜி.கே.நகர், அகிலாண்டபுரம், கோட்டை மாநகர், அழகேகவுண்டன்புதூர், அமராவதி நகர், பங்களாபுதூர், கலிமேடு, அண்ணா நகர், சவுண்டம்மன் கோவில், வனிதா கல்வி நிலையம், அய்யாவு செட்டியார் வீதி, காமராஜ் நகர், சௌடாம்பிகை நகர் பகுதியிலும், சென்னிமலை பேரூராட்சியிலும், தி.மு.க., ஆட்சியில் செய்த நல திட்டங்களை கூறி அமைச்சர் சாமிநாதன், வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:- முத்துார் காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், காங்கேயம் மாவட்ட அரசு தலைலம மருத்துவமனைக்கு புதிய கட்டடம், அண்ணாநகரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம், சிவன்மலை மலைப்பாதை சீரமைத்தல் பணி 3 கோடி மதிப்பில் நிறைவேற்றம், காங்கேயம் காளை சிலை, சிவன்மலையில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னிமலைக்கு ஐந்தாண்டு ஆட்சியில், 15 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி புதிய கூட்டு குடிநீர் திட்டம் நடந்து வருகிறது, காமராஜர் நகர், காந்திநகர், வார்டு எண் 5, 9ல் ஐந்து மேல்நிலை தொட்டி கட்டித்தரப்பட்டுள்ளது.
அப்பாய் செட்டி வீதி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் மின்கோபுரம் அமைத்து தரப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சி வாரச்சந்தை கடை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டது. அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் கரும்பு ஒரு டன்னுக்கு, 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஆயிரம் கிராம கோயில்கள் சீரமைக்கப்படும். பால் கொள்முதல் லிட்டர் ரூ.5 உயர்த்தி வழங்கப்படும், வீடில்லாதவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். மகளிருக்கு ரூ.2 ஆயிரமாக உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். ரூ.8 ஆயிரம் மதிப்பு கூப்பன் வழங்கப்படும் என ஏராளமான நல்ல திட்டங்களை, நமது முதல்வர் வழங்க உள்ளார். இவ்வாறு பேசினார்.

Advertisement