எம்.பி.,க்கள் பேச வாய்ப்பு இருக்காது: சிதம்பரம் கணிப்பு

2

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பிரசாரத்தில் காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:

மகளிருக்கு 8,௦௦௦ கூப்பன் வழங்க உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கூப்பன் வாயிலாக பொருட்களைத்தான் வாங்க முடியும். இதனால் உள்ளூரில் பொருளாதாரம் வளரும்.

பார்லிமென்ட்டை பிரதமர் மோடி ரப்பர் ஸ்டாம்ப் ஆக்க முயல்கிறார். தற்போது 543 எம்.பி.,க்கள் உள்ளபோதே 3 மாதங்களுக்கு ஒரு முறை தான், ஒருவர் பேச 7 நிமிடம் வாய்ப்பு கிடைக்கிறது.

தொகுதி சீரமைப்பால் 816 எம்.பி.,க்கள் வந்தால், 5 மாதங்களுக்கு ஒரு முறை 3 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு பேசினார்.

Advertisement