போட்டு அலட்டிக்காதீங்க
விசில் கட்சித் தலைவரை சந்தித்த ஆனந்த தலைவர், 'இன்னும் இரண்டு நாட்கள் தான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். வெயில் கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கிறது. அதனால், மாலை நேரத்தில் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம் தலைவரே' என்று சொல்ல, 'மக்கள் எப்படி இருந்தாலும், நமக்கு ஓட்டு போட தயாராகிட்டாங்க. போட்டு அலட்டிக்க வேண்டாம்' என விசில் தலைவர் சொல்லி விட்டாராம்.
@block_B@ ஈ.வெ.ரா., கூடாது
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் பேர்வழி என்று, கருப்பு சட்டையுடன் வலம் வந்த சூரிய கட்சித் தலைவர் மற்றும் சகோதரி மீது கட்சியினர் கடும் கோபத்தில் இருக்கின்றனராம். அதுமட்டுமல்ல, 'ஈ.வெ.ரா., கொள்கைப்படி நடப்பவர் நாங்கள்' என்றும் மொழியான சகோதரி சொல்லி வைக்க, 'தேர்தல் நேரத்தில் இப்படியெல்லாம் பேசி, கடுமையாக இருக்கும் சூழலை மேலும் கடுமையாக்குகிறாரே' என, சூரிய கட்சி வேட்பாளர்கள் புலம்புகின்றனராம்.block_B
@block_P@ விரும்பினது நீங்கதானே
சூரிய கட்சியிடம் கடும் நெருக்கடி கொடுத்து 28 தொகுதிகளை கை கட்சியினர் பெற்று விட்டதால், கடந்த முறை போல, இந்தத் தேர்தலில் சூரிய கட்சி தரப்பில், கை கட்சி வேட்பாளர்களுக்கு, பிரசாரம், நிதி உள்ளிட்ட எந்த விஷயத்திலும் உதவி செய்யவில்லையாம். இதை, தமிழகம் வந்த கை கட்சித் தலைவரிடம் சொல்லி உள்ளனர் சில வேட்பாளர்கள். 'நீங்க தானே விரும்பி கூட்டணி வெச்சுகிட்டு, தேர்தல்ல நிக்கிறீங்க... அது உங்க பாடு' என சொல்லி விட்டாராம் கை தலைவர்.block_P