'சேது சமுத்திரம் திட்டத்தில் பணத்தை சுருட்டிய திமுக மந்திரி!'
பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு எனப்படும் அபிடவிட்களில் பல செய்திகள் ஒளிந்திருக்கும். அதைத் தேடி கண்டுபிடித்து, என்ன சொல்கிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஏகப்பட்ட பிரேக்கிங் செய்திகள் கிடைக்கும். இந்த அபிடவிட்டைப் படித்து சரியாக புரிந்துகொண்டு செய்தியாக்குவதே ஒரு கலைதான். அதிலும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படும் அபிடவிட்களில் ப்ளாஷ் செய்திகள் ஏராளமாக இருக்கும். அரசின் நிலை என்ன என்பதை இந்த பதில் மனுவை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
ஆனால் அரசு பதில் மனுவை தாக்கல் செய்தாலும் இந்த அபிடவிட்டை பத்திரிகையாளர்களுக்கு தர மாட்டார்கள். ஆனால் எதிர் தரப்பிற்கு கட்டயம் தர வேண்டும். இதனால் நாங்கள் எதிர் தரப்பிலிருந்து அரசின் பதிலை வாங்கிக்கொள்வோம். இப்படி மத்திய அரசின் ஒரு அபிடவிட் நாட்டின் அரசியலையே மாற்றிவிட்டதோடு பெரும் அரசியல் புயலை உண்டாக்கியது.
சேது சமுத்திர திட்டம்
அபிடவிட்டிற்கு போவதற்கு முன்பாக இந்த வழக்கு என்ன? அதுவரை கோர்ட்டில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இந்த கூட்டணியில் திமுக இருந்ததால் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தனர். டி.ஆர்.பாலு கப்பல் துறையின் அமைச்சராக இருந்தார். இவருடைய குடும்பத்தினர் கப்பல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்படியிருக்க இவர் எப்படி கப்பல் துறைக்கு அமைச்சராக இருக்க முடியும் என பலர் கேள்வி எழுப்பினர். ஆனால் திமுகவின் ஆதரவு இல்லாமல் மன்மோகன் அரசு நிலைக்காது என்ற காரணத்தால் திமுகவின் நெருக்கடிக்கு பயந்து செயல்பட்டார் பிரதமர். இந்த சமயத்தில்தான் சேது சமுத்திரம் திட்டம் செயல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள ராமர் பாலத்தை உடைத்து
இந்த திட்டத்தை செயல்படுத்தப் போகின்றனர் எனவே இதை தடை செய்ய வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நேரத்தில் ராமர் பாலம் இயற்கையாக அமைந்தது…ராமருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என திமுகவினர் பேசினர். ராமர் பாலத்தை உடைப்பதற்காக கப்பல்கள் தயாராக நின்றன.
இதுதான் விதியா?
ஆகஸ்ட் 31, 2007
வழக்கமாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றால் காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி எதற்கு அவசர வழக்கு என்பதை வக்கீல் விளக்க வேண்டும். சில சமயம் இதை ஏற்றுக்கொண்டு அன்றோ அல்லது மறுதினமோ அந்த வழக்கை விசாரிக்க உத்தவிடுவார் தலைமை நீதிபதி. ஆனால் ஆகஸ்ட் 31ல் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அரசு பயணமாக வெளிநாடு சென்றிருந்தார். அடுத்த சீனியர் நீதிபதி பி.என்.அகர்வால். இவருடைய அமர்வு கோர்ட் எண் 2.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை காலை 10.30 மணிக்கு தொடங்கும். சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தின் 2ம் நம்பர் கோர்ட்டிற்கு சென்றார். அமர்வு முன்…சேது சமுத்திரம் திட்டத்திற்காக நாளை ராமர் சேது பாலத்தை வெடி வைத்து தகர்க்கப்போகிறார்கள்..ராமர் கட்டிய பாலத்தை மத்திய அரசு குறிப்பாக திமுக அமைச்சர் பாலு இடித்து சேது திட்டத்தை செயல்படுத்த துடியாக உள்ளார்…அந்த பாலம் இடிக்கப்பட்டால் நிலுவையில் உள்ள என் மனு தேவையற்றதாகிவிடும்.
எனவே இன்றே என் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார் சுவாமி. நீதிபதி அகர்வால் அவருடன் அமர்ந்திருந்த பி.பி. நௌலேக்கரிடம் ஏதோ பேசினார். இரண்டு நிமிடங்கள் கழிந்தன. “இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்…மத்திய அரசுக்கு இதை தெரிவித்துவிடுங்கள் “ என சுவாமியிடம் சொன்னதோடு கோர்ட் மாஸ்டரிடமும் அட்டார்னி ஜெனரலுக்கு தெரிவிக்குமாறு சொன்னார் நீதிபதி அகர்வால்.
தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் இருந்திருந்தால் இப்படி அவசர வழக்காக சுவாமியின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான் என வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்பட்டது.
தடை
மதியம் 2 மணி. கோர்ட் எண் 2.
வழக்கறிஞர்கள்…பார்வையாளர்கள்…சில அரசியல்வாதிகள் என ஏகப்பட்ட கூட்டம். நான் மதியம் 1.30க்கே கோர்ட்டில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டேன். சுவாமி அவருடைய மனைவியுடன் கையில் பைல்களோடு தயாராக இருந்தார். எதிர் தரப்பில் மன்னார்குடிக்காரரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் அரசுக்காக வாதாட தயாரக இருந்தார். மிகவும் ஸ்டைலாக ஆங்கிலத்தில் வாதம் செய்பவர் இவர்.
நீதிபதிகள் அகர்வால், நௌலேகர் கோர்ட்டிற்குள் வந்து அமர்ந்தனர். அதுவரை சளசளவென கேட்ட வக்கீல்களின் பேச்சு சத்தம் அடங்கியது. சுவாமி தன் வாதத்தை ஆரம்பித்தார். ஹிந்துக்களின் நம்பிக்கை இந்த ராமர் சேது பாலம்…அதை உடைக்க அதில் ஓட்டைகள் போடப்பட்டுவிட்டன. இதில் வெடிமருந்துகளை நுழைத்து பாலத்தைத் தகர்க்கப் போகிறார்கள்.
அப்படி தகர்க்கப்பட்டால் ஹிந்துக்களுக்கு மிகப்பெரிய ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஹிந்துக்களின் நம்பிக்கையை அரசு வெடி வைத்து தகர்க்கப்பார்க்கிறது…ராமர் பாலம் நம் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும்..எனவே இப்போதைக்கு ராமர் பாலத்தை தகர்க்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார் சுப்ரமணியன் சுவாமி.
இதையடுத்து வாதிட எழுந்தார் கோபால் சுப்ரமணியம்.
சுவாமி சொல்வதைப் போல நாங்கள் வெடி வைத்து தகர்க்கப்போவதில்லை…தவிர, சேது சமுத்திர திட்டம் ஒரு தேசிய திட்டம்…இதனால் ராமர் பாலத்திற்கு எந்த பிரச்னையும் வராது…இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பயண தூரத்தை வெகுவாக இந்த திட்டம் குறைத்துவிடும்…எனவே எந்த தடையும் விதிக்கக்கூடாது.. என்பது அவரது வாதம்.
இரண்டு நீதிபதிகளும் தங்களுக்குள் 2 நிமிடங்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
நீதிபதி அகர்வால் கோபால் சுப்ரமணியத்திடம் கேட்டார்..” ராமர் பாலத்திற்கு சேதம் எதுவும் வராது என உங்களால் உறுதிமொழி தர முடியுமா”
“ராமர் பாலத்திற்கு எந்தவித பிரச்னையும் வராது” என்றார் கோபால் சுப்பிரமணியம்
“ இதை அபிடவிட்டாக உறுதிமொழி கொடுக்க முடியுமா” மீண்டும் கேட்டார் நீதிபதி அகர்வால்.
கோபால் சுப்ரமணியம் அவர் அருகே இருந்த அதிகாரிகளிடம் பேசினார். பிறகு, “ ராமர் சேது பாலத்தின் அமைப்பிற்கு சேதம் வராது” என மீண்டும் சமீண்டும்கோபால்.
மீண்டும் நீதிபதிகள் தங்களுக்குள் பேசினார்கள். கோர்ட் மாஸ்டரைப் பார்த்து…”டேக் டவுன் த ஆர்டர்” என்றார் நீதிபதி. உடனே நான் முன் வரிசைக்கு அருகே சென்று ஓரமாக நின்று கொண்டேன். கையில் நோட்புக்குடன் தயாராக இருந்தேன். அப்போது அதாவது 2007ல் கோர்ட்டிற்குள் பத்திரிகையாளர்கள் செல்போன் கொண்டு செல்ல முடியாது.
உத்தரவை டிக்டேட் செய்ய ஆரம்பித்தார் நீதிபதி. வழக்கு என்ன என்பதை விரிவாக விவரித்தார் நீதிபதி…பிறகு எங்கள் உத்தரவு என சொல்ல…கோர்ட்டில் இருந்த அனைவரும் பரபரப்பானோம்.
“ராமர் சேது பாலம் எந்த வகையிலும் சேதப்படுத்தக்கூடாது…இது ஒரு தற்காலிக உத்தரவு…மீண்டும் இந்த வழக்கு செப்டம்பர் 14ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி.
அடுத்த விநாடி நான், சக ரிப்போர்ட்டர்கள் அனைவரும் கோர்ட் அறையிலிருந்து வெளியே ஓடினோம். உடனே ஆபீஸுக்கு இந்த பிரேக்கிங் செய்தியைச் சொல்ல. அப்போது வாட்ஸ் அப் பிரபலமாகாத காலம். நியூஸ் டெஸ்க்கிற்கு போன் செய்து என்ன ப்ளாஷ் செய்ய வேண்டும் என நான்கு வரிகள் சொல்லிவிட்டு மீதத்தை மெயிலில் அனுப்புகிறேன் என சொன்னேன்.
கேமரா முன் உடனடியாக வந்து நில்லுங்கள் என உத்தரவு. பிறகு உச்ச நீதிமன்ற புல்வெளியில் இருந்து லைவ் செய்தேன். இந்த செய்தி மத்திய அரசுக்கும்…குறிப்பாக திமுகவிற்கும் பெரும் இடியாக விழுந்தது. வெளியே வந்த சுவாமியை கேமிராக்கள் மொய்த்துக்கொள்ள..அவர் பேச…அனைத்து சேனல்களும் லைவ் ரிலே செய்தன. பிறகு என்னிடம் சுவாமி சொன்னார். ”திமுக அமைச்சர் இந்த திட்டத்தில் ஏகப்பட்ட பணம் அடித்துவிட்டார்” என்றார். தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் வெளிநாடு போகாமலிருந்தால் இந்த தடை வந்திருக்குமா என உச்ச நீதிமன்ற காரிடாரில் ஒரு பட்டிமன்றமே நடந்தது. ஒரு வேளை இதுதான் விதியா?
- அ.வைத்தியநாதன்
அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: mailto:vaithi@dinamalar.in
இந்தத் தொடர் கட்டுரையின் அடுத்த பகுதி:
ராமர் என்பதே ஒரு கற்பனை பாத்திரம்; காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தால் அதிர்ச்சி
நாளை 21ம் தேதி காலை 7:00 மணிக்கு வெளியாகும்.
என்ன பயன். பணம் அடித்து விட்டான். ஆனால் தண்டனை இல்லையே. மோசமான நீதி துறை. பணம் பாதாளம் வரை பாயும் . வாழ்க இந்தியா வாழ்க தமிழ் நாடு
தண்ணியில் தங்கம் அள்ளியவன்
நாட்டில் மக்கள் நல்லவர்களாக இருக்கவேண்டுமா கெட்டவர்களாக இருக்க வேண்டுமா என்பதை நீதித்துறையும் கல்வித்துறையும் தான் முடிவு செய்கின்றன
அவர்களின் நடத்தைகளில் பிழை ஏற்பட்டால் மக்கள் கெடுவார்கள்
அதனால் நாட்டில் குற்றவாளிகள் ஏற்பட்டால் குற்றவாளிகள் உற்பத்தியான கல்வித்துறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும், அந்த மாவட்ட நீதிபதிக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
இதுதான் நாடு திருந்த ஒரே வழி
மற்றவை எல்லாம் சம்பளம் வாங்க உதவும் கண் துடைப்பு ஏமாற்று வேலைகள்
200 க்கு மேற்பட்ட இந்துக்களின் கோயில்களை இடித்த திமுக அரசின் பாலு தனது சொந்த சரக்கு கப்பல்களின் வசதிக்காக இராமர் பாலத்தை இடிக்க முயன்றதை சுப்பிரமணியன் சுவாமி தடுத்து விட்டார். இந்த இந்துவிரோத கும்பல்களுக்கு வாக்களிப்பது மிக கொடுமையான பாவம். மக்களே கவனிங்க மக்களே.
அட போங்கப்பா. டி. ஆர். பாலுவுக்கு கடன் கொடுத்தது அவர் மகன் தான் தெரியாதாம். அண்ணாமலை டி. ஆர் பாலு கோர்ட் விவாதத்தில் சொல்லியது
நேர்மையானவர் என்று சொல்லப்பட்ட மன்மோகன் ஒத்துழைத்தார் ......
வரலாற்றிலேயே இல்லாத மிக சிறந்த திட்டம். அதாவது கடலில் இருந்து மண்ணை அள்ளி திரும்ப கடலிலேயே கொட்டும் திட்டம். எப்படி எல்லாம் டிசைன் டிசைனா கொள்ளை நடந்து உள்ளது. காங்கிரஸ் ஊழலை வரலாற்று பக்கங்களில் எழுதலாம்.
இப்படி பழங்கதைகளை பேசியே தமிழக பாஜகவினர் அடுத்த ஐந்து ஆண்டுகளும் கழிக்க வேண்டியது தான்!
திருட்டு திமுக களவானிங்க ஆட்டய போட்டதில் உன்னுடைய பங்கு உனக்கு சரியாக வந்துவிட்டபடியால் இனி இந்துமத விரோத இந்துமத துரோக மானங்கெட்ட திமுகவுக்கு சொம்படிப்பதை தவிர மற்ற வேலையில்லை உங்களுக்கு
வெட்கமே இல்லாம ஹிந்து பெயரில் திரிவது ஏன்?
மத்திய அரசுக்கு இடி எல்லாம் விழவில்லை. ராமர் பாலத்தை உடைத்தே தீருவோம் என்று நீதிமன்றத்தில் சொல்லி விட்டு வடநாட்டில் ஓட்டு கேட்க முடியாது. அதனால் தான் மழுப்பலான வாதத்தை முன் வைத்தார்கள். அதே நேரம் திமுகவையும் திருப்தி படுத்த வேண்டும். கொள்ளைப் பணத்தையும் இழக்க கூடாது என்ற வகையில் அடுத்த வார வாதத்தை எதிர் பார்க்கலாம்.
சேது சமுத்திரம் வந்தால் இந்திய நாட்டின் பொருளாதாரம் மேம்படும் அதை தடுப்பதற்காக வெளிநாட்டு சதி திட்டத்திற்கு இங்கு உள்ள சில கைக்கூலிகள் உடந்தையாக இருந்தனர்
சிறிய கப்பல்கள் மட்டுமே அதுவும் ஒருவழிப் பாதை அகலத்தில் அமைக்கப்படும் கால்வாய் மூலமாக செல்வதால் எந்த நாட்டின் பொருளாதாரமும் உயருமா? கால்வாயில் மேலும் மேலும் மணல் சேருவதை தடுக்க ஆண்டு முழுவதும் பல கோடி செலவில் மணல் வாரி அகற்றி கொண்டே இருக்கவேண்டும். சிறிய சுனாமி வந்தாலும் கால்வாய் மேடாகி காணாமற் போயிருக்கும். ஆக அது பாலுவின் கொள்ளைத் திட்டம்.