காத்தாடிய ரோடு ஷோ; கடும் கோபத்தில் அமித் ஷா
மொடக்குறிச்சி மற்றும் சென்னையின் தி.நகரில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, நேற்று முன்தினம் ரோடு ஷோ வாயிலாக பிரசாரம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இந்த ரோடு ஷோ, மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கில் ஆட்களை திரட்ட முடிவெடுக்கப்பட்டது. அதற்காக, இரண்டு லட்சம் பேரை திரட்டி வரும் பொறுப்பு, கட்சியின் மண்டலப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு லட்சம் பேருக்கும், தலா 400 ரூபாய் என கணக்குப் போட்டு, மொத்த தொகையும் கொடுக்கப்பட்டது.
ஆனால், அமித் ஷாவின் ரோடு ஷோவுக்கு வந்தவர்களே 400 பேர் தான் என்பதால், பா.ஜ., நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரோடு ஷோவில் கலந்து கொண்ட அமித் ஷாவும், கூட்டம் இல்லாததால் கடும் கோபம் அடைந்துள்ளார். தன் அதிருப்தியை கட்சி நிர்வாகிகளிடம் தெரிவிக்க, கூட்டத்தை கூட்டுவதாகச் சொல்லி ஏமாற்றிய நபரின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து (7)
Abdul Rahim - Karaikudi,இந்தியா
21 ஏப்,2026 - 09:29 Report Abuse
இனிமேல் மற்ற கட்சிகள் காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பதாக எவனாவது எழுதட்டும் அப்போது இருக்கு... 0
0
Reply
Sivaprakasam Chinnayan - ,இந்தியா
21 ஏப்,2026 - 09:05 Report Abuse
வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் மகா புத்திசாலிகளை ஒருத்தரும் காணவில்லை 0
0
Abdul Rahim - Karaikudi,இந்தியா
21 ஏப்,2026 - 09:27Report Abuse
400 வாங்க வரிசையில் நிற்க்க போயிட்டாங்க..... 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
21 ஏப்,2026 - 08:39 Report Abuse
ஜி வந்தாலும் இதே நிலை தான் 0
0
Reply
Mario - London,இந்தியா
21 ஏப்,2026 - 08:36 Report Abuse
ரிசல்ட் தெரிந்துவிட்டது 0
0
Reply
S. Venugopal - Chennai,இந்தியா
21 ஏப்,2026 - 08:33 Report Abuse
பெரும்பாலான தமிழக ப ஜ க நிர்வாகிகள் மற்ற மாநில நிர்வாகிகளைப்போல் கொள்கைக்காக கட்சி இல்லை அவர்கள் மற்ற கட்சியில் உள்ளதை போல் தனக்காக ஒரு கூட்டத்தினை வைத்துக்கொண்டு பதவிக்காகவம் மத்தியில் உள்ள ஆட்சியினை வைத்து பிழைக்கவும் ப ஜ க உள்ளார்கள் என்பதினை மத்திய ப ஐ க நிர்வாகிகள் உணரவேண்டும். இவர்களில் பலர் மற்றக்கட்சிலிருந்து விரட்டப்பட்டவர்கள் ஓரம்கட்டப்பட்டவர்கள் என்பதினையும் உணரவேண்டும். 0
0
Reply
தமிழன் மணி - ,இந்தியா
21 ஏப்,2026 - 08:11 Report Abuse
என்ன செய்ய சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் கட்சிக்கே தொகுதியில் 400 ஓட்டு கிடைத்தால் புண்ணியம் 0
0
Reply
மேலும்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
-
திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது
-
ஓட்டுச்சாவடிகளில் பல வண்ணங்களில் குறியீடு; வாக்காளர்களின் சிரமத்தை தவிர்க்க ஏற்பாடு
Advertisement
Advertisement