தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
சென்னை: ''நானும் ஒரு திராவிடன் தான்; அதை மறக்காதீர்கள், தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது '' என நிருபர்கள் சந்திப்பில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில், தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு தமிழகம் வந்தார்.
சென்னை கிண்டியில் நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: அரசியலுக்காக தான் திமுகவினர் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்; டில்லியை வீழ்த்தியதாக ஸ்டாலின் பேசியது அதிர்ச்சியளிக்கிறது.
நாம் எல்லோரும் திராவிடர்கள் என்று அழைக்கப்படுகிறோம். தாய்மொழியை காப்பதில் தலைசிறந்தவர்கள் தமிழர்கள். ஆந்திராவுக்கும், தமிழகத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. 'நானும் ஒரு திராவிடன் தான்; அதை மறக்காதீர்கள்.
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது. 50 சதவீதம் அதிகரிக்கும். சென்னையில் சாலைகள் சரியில்லை, மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடியவில்லை.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சந்திரபாபு நாயுடு பிரசாரம்; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செ ய்யுங்கள்
அது எல்லாம் சரிங்கோ நேரு மற்றும் வேலு இருவரையும் இன்று வரைக்கும் ED நெருங்க கூட முடியவில்லையே இதற்கு பின்னல் நீங்கள் இருப்பதாக ஒரு பேச்சு ulladahe ? இருவருக்கும் மறைமுகமாக எதுவும் உதவி செய்ய படுகிறதா ? இதை தமிழக மக்கள் கேக்குறார்கள்.
மோடியைத் திட்டி இவர் பேசின பேச்செல்லாம் யுடியூபில் தூசி தட்டிப் பாக்கலாம்.
படித்ததவர் சந்திரபாபு நாயுடு . விளக்குகிறார் . இல்லை என்று சொல்பவனுக்கு அறிவு வேண்டாம் திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கொண்டு இருக்காலாம் . இருக்கு என்பவன்தான் பாவம் அவன் விளக்கவேண்டும் . விளக்கிவிட்டார் . புரிந்துகொள்ளவும் அறிவு வேண்டும் .
நீங்க யாரு இதற்கு பதில் சொல்லுவதற்கு . அமித்ஷா ஒரு மணி நேரம் கேட்டதற்கு எதற்கு .
நாயுடு ஒரு புத்திசாலி முதல்வர் . மத்திய அரசை சரியாக பயன்படுத்துகிறார் . மாநில வளர்ச்சிபெற இந்த வயதிலும் கடுமையாக உழைக்கிறார் . அந்த மாதிரி ஒரு தலைவர் நமக்கு இல்லை.
திரு திராவிடன்ஸ் 70 வருஷமா டிராவிட நாடு, சமஸ்கிருதம், ஹிந்தி எதிர்ப்பு, போன்ற ஊசி போன வடையை சுடும் வேலையை செய்து வருகிறது. கடைகோடி எங்களின் கிராமத்தில் பெட்டி கடை பாட்டி 70 வயது அருமையாக ஹிந்தி பேசுகிறார். ஏனெனில் இங்கே உள்ள அனைத்து தொழிளாளர்களும் வடக்கன்ஸ். டாஸ்மாக் மாநிலத்தில் திரு திராவிடன்ஸ் ஹிந்தி திணிப்பை அருமையாக செய்கின்றனர். இவர்களுக்கு வடக்கன் தயவில்லாமல் எதுவும் அசையாது
மத்திய பாஜக ஒரு சிறுபான்மை அரசாங்கம். அது தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் கட்சி போன்ற இரண்டு அடிமைத்தனமான கட்சிகளின் உதவியுடன் இயங்கி வருகிறது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்தை வெல்லப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும், வேண்டுமென்றே திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பழி சுமத்தி, சட்டமன்றத் தேர்தலில் ஒரு கெட்ட பெயரை உருவாக்க விரும்புகிறார்கள். பாஜக மிகவும் ஏமாற்றும் நபர்களுடன் இருக்கிறது.
வாளைய அடிமை murg mani endra போர்வையில் ...கதறல் அருமை. ஒரு tanker jelusil பார்சல்
சந்திரபாபு சொல்வது சரிதான். ஸ்டாலின் மட்டுமே திராவிட மாடலை மொத்தக் குத்தகைக்கு எடுத்துவிடவில்லை. திராவிடர்களின் முன்னேற்றத்தைப் பற்றிப் பேச ஸ்டாலினுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை சந்திரபாபுக்கும் இருக்கிறது.
ஆந்திராவின் பார்லிமென்ட் அரசியல் பலம் குறையும் என்றால், நாயுடு அவர்கள் இந்த திட்டத்தை ஏற்று கொள்ளமாட்டார். இது தான் உண்மை.
அரசியலுக்காகவும், தமிழக, வங்காள, அசாம் தேர்தலில் இதை ஒரு பிரச்னையாக்கவும், மக்களை ஏமாற்றி வோட்டு பெற இது நடந்து உள்ளது.
ஒரிஜினல் திராவிடன் சொல்லிட்டாரு இப்பவாவது ஏத்துக்குங்க திராவிடன் ஸ்டாக்க்ஸ்மேலும்
-
பயன்பாட்டிற்கு வராத கூட்டுக் குடிநீர் திட்ட தொட்டிகள் :பற்றாக்குறையால் மக்கள் அவதி
-
ஸ்ரீவி.,யில் பதட்டமான ஓட்டுச்சாவடிகள்னு: பாதுகாப்பில் வெளி மாநில போலீசார்
-
பறக்கும் படையை திசை திருப்பி பட்டுவாடா; ஸ்ரீவில்லிபுத்துாரில் கட்சிகள் விறுவிறுப்பு
-
ரூ. 8 ஆயிரம் கூப்பனில் பொருளாதார தத்துவம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
-
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி தொகுதி வாரியாக போலீசாருக்கு பணி ஒதுக்கீடு
-
மாணவருக்கு பாராட்டு