சொத்துக்கணக்கை விஜய் மறைத்தது முறைகேடானது: வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: விஜய் தனது சொத்துக்கணக்கில் ரூ.100 கோடி அளவுக்கு மறைத்தது முறைகேடானது என கருத்து தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட், இந்த மனு குறித்து பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இரு தொகுதிகளில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம்பெற்று உள்ளன; பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் சொத்து மதிப்பு 115 கோடி ரூபாய் என குறிப்பிட்ட விஜய், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பு மனுவில், 220 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். எனவே, விஜய் தெரிவித்து உள்ள சொத்து விபரங்கள் முழுமையானவையா; உண்மையானவையா என, வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரி, பெரம்பூர் தொகுதி வாக்காளர் விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், ஒரு தொகுதியில் குறிப்பிட்ட அளவு வருமானத்தை காட்டிவிட்டு, மற்றொரு தொகுதியில் மறைத்தது சட்டவிரோதமானது. முறைகேடானது. ரூ.100 கோடியை மறைத்தது முறைகேடானது என தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து விசாரணை நடத்தவும், பதில் மனு தாக்கல் செய்யவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (24)
Ramesh Trichy - ,இந்தியா
21 ஏப்,2026 - 10:26 Report Abuse
யுவர் ஆனர், ரெண்டுமே தப்பு, சொத்தின் மதிப்பு அவரது மனைவிக்கு தெரிய வாய்ப்பு உள்ளது. கணம் கோர்ட்டர் அவரிடம் விசாரிக்கலாம். 0
0
Reply
Narayanan - chennai,இந்தியா
21 ஏப்,2026 - 10:23 Report Abuse
கனம் நீதிபதி அவர்களே தேர்தல் வேட்ப்பு மனு தாக்கல் செய்தவர்கள் அனைவருமே முறைகேடான பதிவைத்தான் செய்திருக்கிறார்கள். எந்த வேட்ப்பாளரும் அவர்களின் சொத்தை முழுமையாக வெளியிடவில்லை . இதுதான் நிதர்சனம் . இதில் இந்த விசாரனையே தவறு . 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
21 ஏப்,2026 - 06:26 Report Abuse
இதைக்கூட சரியாக செய்யமுடியாதவர் எப்படி ஆட்சி ? 0
0
Reply
Kalyanasundaram Linga Moorthi - Accra,இந்தியா
20 ஏப்,2026 - 20:43 Report Abuse
why did not ask dmk and allies, kongress families 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
20 ஏப்,2026 - 18:30 Report Abuse
இதே கேள்வியை பேரன் காரில் பவணி வரும் அப்பாவை கேட்க வேண்டும். 0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
20 ஏப்,2026 - 17:42 Report Abuse
தடை அதை உடை புது சரித்திரம் படை 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
20 ஏப்,2026 - 17:22 Report Abuse
இது விஜயோட கவனக்குறைவு .இரண்டு தொகுதிகளிலும் மனு அளிக்கும்போது சொத்துக்கள் ஒன்றுதானே .அதனால் ஒன்றில் அதிகமின்னொன்றில் குறைவு ?அப்படிருக்கும்பொது எப்படி நீதிமன்றம் கேள்வி எழுப்பாமல் இருக்கமுடியும் .அல்லது அதை தயாரித்தவர்கள் வேண்டுமென்றே போட்டுக்கொடுத்துவிட்டார்களா ? 0
0
Mariadoss E - Trichy,இந்தியா
20 ஏப்,2026 - 22:08Report Abuse
நல்ல முட்டு 0
0
Reply
Kadaparai Mani - chennai,இந்தியா
20 ஏப்,2026 - 17:14 Report Abuse
If punishment is given under Representation of people act, he can never con elections in future. Further judge has pointed out severe action can be taken as per income tax act. 0
0
Reply
VSMani - ,இந்தியா
20 ஏப்,2026 - 17:05 Report Abuse
விஜய் சொத்து கணக்கை மறைத்தால் அதை பூதாகரமாக பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க்கிறார்கள். ஆனால், திமுக அதிமுக ஸ்டாலின், உதயநிதி துறைமுருகன் நேரு போன்றோர் மறைத்த சொத்துக்கணக்கை யாருமே கேட்பதில்லை. ஒரு சிறிய பையன் விஜய் எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று தேர்தலில் நின்றால் என்னமாதிரி குடைச்சல் கொடுக்கிறார்கள். 0
0
DEVA - kumbakonam,இந்தியா
20 ஏப்,2026 - 17:45Report Abuse
ஹா ஹா ஹா தமிழக மக்களுக்கு எதாவது நல்லது செய்வாரா? எப்படி செய்வாரு ? யாரிடம் இருக்கிறது பணம்? தமிழக அரசு திவாலில் உள்ளது மத்திய அரசாக பார்த்து எதாவது கடன் கொடுத்தால் உண்டு.. 0
0
Mariadoss E - Trichy,இந்தியா
20 ஏப்,2026 - 22:12Report Abuse
துரைமுருகன், நேரு, ஸ்டாலின், உதயநிதி சரியில்ல என்று தானே நம்ம யோக்கியன் வரார் பதவிக்கு வருமுன்னே அவரும் அப்படியே இருந்தா எப்படி சாதிக்க முடியும். 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
20 ஏப்,2026 - 16:52 Report Abuse
கணம் பெரிய ஐயா அவர்களே - அப்படியே அந்த கார் கூட இல்லைனு ஒருத்தர் கணக்கு கொடுத்து இருக்காரே -அவரையும் கொஞ்சம் கவனியுங்க சார் 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
Advertisement
Advertisement