பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டு சேரிப்பு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க., வேட்பாளர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம் ராதாபுரம் மதுரப்பாக்கம் சிறுவள்ளிக்குப்பம் வாக்கூர் பகுதிகளில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
பா.ம.க., தொகுதி பொறுப்பாளர் ஆலயமணி மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் , மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவர் வேல்முருகன்,கிளைக் கழக செயலாளர் கார்த்திகேயன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் முகுந்தன் , பன்னீர் ,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நரசிம்மன் ,நிர்வாகிகள் சுப்பிரமணி, குமரன், கிளைச் செயலாளர்கள் பாலு, சீனு, அறிவழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement