தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும்; வேட்பாளர் சரவணன் உறுதி

பரங்கிப்பேட்டை: தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என புவனகிரி தொகுதி வேட்பாளர் சரவணன் பேசினார்.

புவனகிரி தொகுதி ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட தேவங்குடி, கீழப்பாலையூர், மேலப்பாலையூர், பவழங்குடி, வல்லியம், கீரனூர், கார்மாங்குடி, மருங்கூர், காவனூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்த வேனில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், 'தமிழகத்தில், அனைத்து மக்களும் பயனடையும் வகையில் பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். இதனால், நாங்கள் எந்த கிராமத்திற்கு சென்றாலும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர்.

தமிழகத்தில், தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது. புவனகிரி தொகுதியில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என்றார். அவருடன், தி.மு.க.,ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், வி.சி.க., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, மாவட்ட துணை செயலாளர் வீரமணி, ஒன்றிய செயலாளர் கர்ணா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement