சென்னை இனிதாக

ஆன்மிகம்

கபாலீஸ்வரர் கோவில்

விநாயகர் வசந்த விழாவை முன்னிட்டு, நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகன திருவீதி உலா, மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

திருமஞ்சனம், மதியம் 2:30 மணி, உடையவர் தேர் புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சிவசுப்ரமணிய சாமி கோவில்

சஷ்டி அபிஷேக அலங்கார ஆராதனை, காலை 5:00 மணி, ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 5:30 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

அபயம்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனை, காலை 6:00 முதல் 6:00 மணி வரை. இடம்: 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

பொது

தியாக பிரம்ம கான சபா

கண்ணதாசனை கொண்டாடுவோம் கலந்துரையாடல், பங்கேற்பு: இசைக்கவி ரமணன், மரபின்மைந்தன் முத்தையா - மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்.சாலை, தி.நகர்.

கொரிய உணவுத் திருவிழா

'முக்பாங்' எனும் பெயிரில் கொரியாவின் புகழ் பெற்ற தெரு உணவுகளை சுவைக்கலாம், மதியம் 12:00 மணி, மாலை 6:30 மணி. இடம்: லிட்டில் சாய் உணவகம், 6வது அவென்யூ, பெசன்ட் நகர்; 2வது அவென்யூ, அண்ணா நகர் கிழக்கு.

Advertisement