கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு: நீதிபதி விலகல்

1

- டில்லி சிறப்பு நிருபர் -: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது.

இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக தெரிவித்த கெஜ்ரிவால், வழக்கை அவர் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா கூறுகையில், ' 'மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்காக சிலர், சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக அவதுாறு கருத்துகளை பதிவிட்டனர். அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளேன். அந்த வழக்கிற்காக முதன்மை வழக்கில் இருந்து விலகுகிறேன்'' என்றார்.

Advertisement