மகளிர் விடுதிக்குள் நுழைந்த 'சில்மிஷ' வாலிபர் பிடிபட்டார்
கந்தன்சாவடி: மகளிர் விடுதியில் அத்துமீறி நுழைந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற வாலிபர் பிடிபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிந்தாமணி, 32. இவரது சகோதரி, சென்னை, கந்தன்சாவடி பகுதியில் மகளிர் விடுதியில் தங்கி, அருகில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
சகோதரியை பார்க்க வந்த சிந்தாமணி, கடந்த 11ம் தேதி அதிகாலை விடுதியில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத ஒரு நபர், சுவர் ஏறி குதித்து அறையின் உள்ளே நுழைந்துள்ளார்.
இதை கண்டு சிந்தாமணி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த பெண்களும் வந்தனர். அப்போது, மர்ம நபர் கத்தியைக் காட்டி மிரட்டி தப்பிச் சென்றார். இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவை சேர்ந்த லட்சுமணன், 27, என்பது தெரியவந்தது.
கொட்டிவாக்கம் பகுதியில் பரோட்டா மாஸ்டராக பணிபுரியும் இவர் மீது, ஏற்கனவே பெண்களிடம் தொந்தரவு செய்தது தொடர்பாக இரு வழக்குகள் மற்றும் வழிப்பறி வழக்குகளும் உள்ளன. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்