விழுப்புரம் மருதுார் ஏரியை புனரமைத்து படகு குழாமுடன் சுற்றுலாத்தளமாக்கப்படும்: தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் உறுதி
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கூறியதாவது: விழுப்புரம் மக்களின் ஆசியோடு மீண்டும் போட்டியிடுகிறேன். உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவுடன், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த விஷன் 2030 திட்டத்தில், நமது விழுப்புரம் தொகுதியில் என் ஊர் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு திட்டத்தை செயல்படுத்துவேன்.
குறிப்பாக, விழுப்புரம் நகரில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் பாதாள சாக்கடை திட்டத்தை முடித்து கிளீன் அன்டு ஹெல்தி டவுனாக மாற்றப்படும்.தொகுதியில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் புனரமைக்கப்படும். மருதுார் ஏரியை புனரமைத்து, சுற்றுலாத்தளமாக்கி, படகு குழாம், நடை பயிற்சி பாதை, சிறுவர் பூங்கா, உருவாக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில், பல திட்டங்களை கொண்டுவந்துள்ளேன்.
குறிப்பாக, விழுப்புரத்தில் ரூ.3 கோடியில் மீன் மார்க்கெட், 2.50 கோடியில் அறிவுசார் மைய நுாலகம், ரூ.2.18 கோடியில் ஐயனார்குளம் சீரமைப்பு, ரூ.5 கோடியில் எல்.இ.டி. தெருமின் விளக்குகள், ரூ.1.36 கோடியில் நாயக்கன் தோப்பில் வணிக வளாகம், ரூ.2.50 கோடியில் விளையாட்டு திடலுடன் பூங்கா, பாண்டியன் நகரில் ரூ.2.50 கோடியில் பூங்கா, ரூ.3.78 கோடியில் தொழிலாளர் நலவாரிய அலுவலகம், ரூ.6.50 கோடியில் அருங்காட்சியகம், தளவானுாரில் ரூ.86 கோடியில் அணைக்கட்டு, ரூ.5 கோடியில் சாலாமேடில் குடிநீர் திட்டப்பணிகள் நடந்துள்ளது.
ரூ.4.70 கோடியில் தியாகி கோவிந்தசாமி மணிமண்டபம் மகாராஜபுரத்தில் ரூ.1.78 கோடியில் மின் தகனமையம், அரசு மகளிர் பள்ளி ரூ.4.69 கோடியில் தகைசால் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது. மேலும், திட்டங்கள் தொடர தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
கட்டத்தை உடைத்து முதல்வரானேன் 2வது முறையும் ஆட்சிக்கு வரப்போகிறேன்: கார்த்திக் மோகனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
-
தமிழக மக்கள், பெண்களுக்கு பாதுகாப்பு தருவது அ.தி.மு.க.,தான் :பென்ஜமின் பிரசாரம்
-
இரட்டை இலைக்குதான் ஓட்டு பதிவானதா என்று சரிபார்த்து கொள்ளுங்கள்: வளர்மதி வேண்டுகோள்
-
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு :சகோதரர்கள் 'போக்சோ'வில் கைது
-
மீனம்பாக்கம் - நங்கநல்லுார் இடையே 40 நிமிடம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
-
வரும் 1ல் 'மெட்ரோ' பயணியர் அட்டை: சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்