இரட்டை இலைக்குதான் ஓட்டு பதிவானதா என்று சரிபார்த்து கொள்ளுங்கள்: வளர்மதி வேண்டுகோள்
சென்னை:''ஓட்டு இயந்திரத்தில் தி.மு.க.,வினர் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளதால், இரட்டை இலை சின்னத்திற்குதான்தான் ஓட்டு போட்டுள்ளோமா என, வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என, ஆலந்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி பேசினார்.
ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று வாகனத்தில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
டாக்டர் தாமஸ் சாலையில், வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கஞ்சா போதைப் பொருட்கள் விற்பனையை குத்தகைக்கு எடுத்து இருப்பதே தி.மு.க.,தான். கல்லுாரி, பள்ளிக்கு செல்லும் மாணவர்களிடையே, கஞ்சா போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் வந்துவிட்டது.
மின் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி விட்டனர். ஜெயலலிதா ஆட்சியின்போது ஒரே ஒரு முறை மட்டும்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதுகூட, 6 மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள் என, மக்களிடம் கேட்டுக்கொண்டார். அவர் வாக்குறுதி அளித்தப்படி, 4 மாதத்திலேயே மின் கட்டண உயர்வை குறைத்தார்.
இதனால், 200 ரூபாய் வர வேண்டிய மின் கட்டணம், 1,000 ரூபாயாக வருகிறது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வரும், 23ம் தேதி வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு இயந்திரத்தில், 3ம் எண்ணில் உள்ள இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப்போட வேண்டும்.
தி.மு.க.,வினர் ஓட்டு இயந்திரத்தில் இரட்டை இலை அழுத்தினால், உதயசூரியன் சின்னத்திற்கு வரும்படி தில்லு முல்லு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்தபின் அவற்றை சரிபார்த்துவிட்டு வெளியே வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், அ.தி.மு.க., நிர்வாகிகள் சின்னையா, நுங்கை மூர்த்தி, முத்துபரணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
***
மேலும்
-
ராகுல் பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்; பின்னணியில் இருப்பது நிவேதித் ஆல்வா
-
சர்க்கரை ஆலைகளுக்கு புதிய சட்டம்: மே 20 வரை கருத்து தெரிவிக்கலாம்
-
இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள் பயணம் துப்பாக்கி போலீஸ் கட்டுப்பாட்டில் மையங்கள்
-
தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் விடுமுறை கடந்த 20ல் ரூ.13 கோடிக்கு மது விற்பனை
-
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு நிகழ்ச்சி
-
டில்லியில் சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப மாநாடு