கஞ்சா கடத்திய இருவர் கைது
விழுப்புரம்: வளவனுார் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார், நேற்று சின்னகல்லிபட்டு கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியே பைக்கில் வந்த இருவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இவர்கள் வாகனத்தில் 400 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து, போலீசார் கஞ்சா கடத்திய ஆந்திரா மாநிலம், கனகபள்ளியை சேர்ந்த கோவிந்தன் மகன் சாய்கணேஷ்,20; கடலுார் மாவட்டம், தோப்பு கொள்ளையை சேர்ந்த கலைசெல்வன் மகன் ஜீவா,20; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, 400 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். கைதான இருவரிடம் கஞ்சா எங்கிருந்து யார் மூலம் கடத்தி வரப்பட்டது என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.