தேர்தல் விதிமுறை மீறல்: வேட்பாளர் மீது வழக்கு  

விழுப்புரம்:மயிலம் அருகே தேர்தல் விதிமுறை மீறியதாக த.வெ.க., வேட்பாளர் சுரேஷ் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

மயிலம் அருகே சிறுவை கிராமத்தில் கடந்த 18 ம் தேதி த.வெ.க., வேட்பாளர் சுரேஷ் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். அப்போது தேர்தல் விதிமுறை மீறி பட்டாசு வெடித்துள்ளனர். இதையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலை கண்காணிப்பு குழு அலுவலர் எத்திராஜ் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் த.வெ.க., வேட்பாளர் சுரேஷ் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

Advertisement