மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க உதவி
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார்வையற்றோர் மற்றும் காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் உதவிகளுக்கு 85239 26433 மற்றும் 94999 33564 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
மேலும், சக்கரம் நாற்காலி மற்றும் போக்குவரத்து வசதி தேவைப்படுவோர் ECI NET -Saksham செயலி வாயிலாகக் கோரிக்கை விடுக்கலாம். அரசு வழங்கும் இத்தகைய வசதிகளைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement